உலகின் உயரமான இடத்தில் விக்ரம் டிரைலர்...எங்கே தெரியுமா ?
சென்னை : விக்ரம் படத்திற்கு நடத்தப்பட்டு வரும் சர்வதேச அளவிலான ப்ரொமோஷன் ஒட்டு மொத்த சினிமா உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இப்படி ஒரு ப்ரொமோஷனை யாரும் எதிர்பார்க்கலியே என அனைவரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் நடித்துள்ள விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. உலகம் முழுவதும் 5 மொழிகளில் 5000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ள இந்த படத்தை கமல் ரசிகர்கள், சினிமா ரசிகர்கள் தாண்டி சர்வதேச அமவிலான ரசிகர்களும் எதிர்பார்க்க துவங்கி விட்டனர்.

கேரக்டர்கள் பெயர் வெளியீடு
இந்த சமயத்தில் படம் பற்றி மணிக்கு ஒரு அப்டேட் வெளியிட்டு ரசிகர்களின் ஆர்வத்தை உச்சகட்டத்திற்கு எகிற வைத்து வருகிறன்றனர் படக்குழுவினர். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பில் நேற்று படத்தின் மூன்றாவது சிங்கிளாக வேஸ்டட் பாடல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து படத்தில் மிக முக்கிய ரோல்களில் நடிக்கும் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் கேரக்டர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இவர் தான் விக்ரமா
இதில் கமல், அருண்குமார் என்ற ரா ஏஜன்ட் ரோலில் நடிப்பதாகவும், சந்தான தேவன் ரோலில் விஜய் சேதுபதியும், அமர் ரோலில் ஃபகத் ஃபாசிலும் நடிக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டைட்டில் ரோலான விக்ரம் ரோலில் யார் நடித்துள்ளார் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது. லேட்டஸ்ட் தகவலாக சூர்யா தான் விக்ரம் ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்தடுத்த அறிவிப்பு
கேரக்டர்கள் பெயர்களை வெளியிட்ட ராஜ்கமல் ஃபிலிம்ஸ், அடுத்ததாக படத்தின் மற்றொரு ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. இதை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே அசத்தலான புதிய தகவலா ஒன்றையும் வெளியிட்டுள்ளது. படத்திற்கு இப்படி ஒரு ப்ரொமோஷனா என ஆச்சரியமாக ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

இப்படி ஒரு ப்ரொமோஷனா
அதாவது, உலகின் மிக உயர்ந்த கட்டிடமான துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில், ஜுன் 1 ம் தேதி இரவு 8.10 மணிக்கு விக்ரம் படத்தின் டிரைலர் திரையிடப்பட உள்ளதாம். இதற்கு முன் கடந்த ஆண்டு டிசம்பரில் பாலிவுட் படமான 83 படத்தின் டிரைலர் இந்த கட்டிடத்தில் திரையிடப்பட்டது. இந்த படத்தின் தமிழ் டிரைலரை கமல் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

வேற லெவலில் கலக்குறீங்க
சமீபத்தில் ஃபிரான்சில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்ரம் டிரைலர் திரையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது புர்ஜ் கலீஃபாவிலும் விக்ரம் டிரைலர் திரையிடப்பட உள்ளது. மலேசியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் சென்று கமல், விக்ரம் படத்திற்காக ப்ரொமோஷன் செய்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











