ஆண்டவர் சம்பவம் லோடிங்...டிரைலர் ரிலீசே வேற லெவல் ஆட்டமா இருக்கே

சென்னை : உலகநாயகன் கமல் நடித்துள்ள விக்ரம் படத்தின் டிரைலர் வெளியீடு பற்றிய அறிவிப்பு தமிழ் சினிமாவை மட்டுமல்ல, இந்திய சினிமாவையே மிரள வைத்துள்ளது. டிரைலர் ரிலீசே இப்படின்னா, படம் எப்படி இருக்கும் என அனைவரும் எதிர்பார்க்க துவங்கி விட்டனர்.

கிட்டதட்ட 4 ஆண்டுகளாக கமல் படம் எதுவும் ரிலீசாகவில்லை. கடைசியாக 2018 ல் விஸ்வரூபம் 2 படத்தில் தான் கமல் நடித்திருந்தார். அதற்கு துவங்கப்பட்ட ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 படம் பாதியிலேயே நிற்கிறது. மீண்டும் இந்த படத்தை எப்போது துவங்குவார்கள் என தெரியவில்லை.

நெருங்கும் விக்ரம் ரிலீஸ்

நெருங்கும் விக்ரம் ரிலீஸ்

அரசியல், சினிமா என இரண்டிலும் கவனம் செலுத்தி வந்த கமல், பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்தார். இந்தியன் 2 தொடர்ந்து தாமதமாகி வருவதால் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்க துவங்கி, படத்தின் வேலைகளும் முடிந்து, ரிலீசிற்கு தயாராக உள்ளது. இந்த படம் ஜுன் 3 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

முதல் இந்திய சினிமா

முதல் இந்திய சினிமா

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ், DeAging technology யை பயன்படுத்தி, மீண்டும் இளமையான கமலை ரசிகர்களை பார்க்க வைக்க உள்ளார். இந்திய சினிமாவிலேயே முதல் முறையாக விக்ரம் படத்தில் கமலுக்காக தான் இந்த டெக்னாலஜியை பயன்படுத்தி உள்ளார்கள்.

ஆடியோ வெளியீடே பான் வேர்ல்டா

ஆடியோ வெளியீடே பான் வேர்ல்டா

இந்த தகவலே மிரட்டலாக இருக்கிறது என்று பார்த்தால், சமீபத்தில் விக்ரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை ஐக்கிய அரபு நாடுகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆடியோ வெளியீடே பான் வேர்ல்டு லெவலா என ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கையில் இன்று படத்தின் டிரைலர் ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.

டிரைலர் வெளியீடு இங்கேயா

டிரைலர் வெளியீடு இங்கேயா

அதில், மே 18 ம் தேதி Cannes 2022 சர்வதேச திரைப்பட விழாவில் விக்ரம் படத்தின் டிரைலரை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Cannes சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய படம் ஒன்றில் டிரைலர் வெளியிடப்படுவதும் இதுவே முதல் முறையாகும். டிரைலர் வெளியீட்டிற்கு முன்பாக ஆடியோ வெளியீட்டை நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

வேற லெவல் ஆட்டம் தான்

வேற லெவல் ஆட்டம் தான்

கமலின் குத்து பாட்டு, தீம் பாடல்கள் ஆகியவற்றை ஆடியோ வெளியீட்டு விழாவில் வெளியிட போகிறார்களாம். கமல் நடனம் ஆடும் இந்த குத்துப்பாட்டு, அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் அண்ணாத்த ஆடுறார் பாட்டு போல இருக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியிடப்பட்ட விக்ரம் படத்தின் டீசர், க்ளிம்ப்ஸ், டீசரே வேற வெலில் பட்டையை கிளப்பியது. இந்நிலையில் பாடல்கள், டிரைலர் எப்படி இருக்கும் என பார்க்க இந்திய சினிமாவே காத்துக் கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X