Don't Miss!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
பாலிவுட்டில் பொன்னியின் செல்வனை பந்தாடிய விக்ரம் வேதா.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
மும்பை: பாய்காட் விக்ரம் வேதா ஹாஷ்டேக் டிரெண்டானாலும் ஹ்ரித்திக் ரோஷன், சைஃப் அலி கான் நடித்த விக்ரம் வேதா முதல் நாளில் நல்ல தொடக்கத்தை கொடுத்துள்ளது.
மல்டி ஸ்டாரர்கள் நடித்த பொன்னியின் செல்வன் படம் இந்தியில் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.
அதே நேரத்தில் அமீர்கான், அக்ஷய் குமாரின் சமீபத்திய படங்களின் வசூலை விக்ரம் வேதா அசால்ட்டாக முறியடித்து முந்தியுள்ளது.
பொன்னியின்
செல்வன்
படத்தை
'PS’
என
குறிப்பிட
வேண்டாம்..படக்குழுவுக்கு
நோட்டீஸ்!

பாசிட்டிவ் விமர்சனங்கள்
பாலிவுட்டில் புஷ்கர் காயத்ரி இயக்கிய விக்ரம் வேதா படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளன. ஹ்ரித்திக் ரோஷன், சைஃப் அலி கானை எதிர்த்து டிரெண்ட் செய்யபட்ட பாய்காட் விக்ரம் வேதா ஹாஷ்டேக் படம் வெளியான பிறகு காணாமலே போய் விட்டது. இந்தி ரசிகர்கள் அந்த படத்துக்கு இந்த வாரம் முன்னுரிமையை கொடுத்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் பெரிதாக ஓடவில்லை
ஐஸ்வர்யா ராய் நடித்தும் மும்பையில் பெரிய புரமோஷன் நடத்தியும் பொன்னியின் செல்வன் படம் இந்தி பெல்ட்டில் பெரிதாக போகவில்லை. ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2 மற்றும் பிரம்மாஸ்திரா படங்களுக்கு முதல் நாள் இருந்த ஈர்ப்பு பொன்னியின் செல்வனுக்கு அங்கே பெரிய அளவில் மிஸ்ஸிங்.

வெறும் 1.5 கோடி தான்
பொன்னியின் செல்வனுக்கும் பாலிவுட்டில் ராஜமெளலியை வைத்து புரமோஷன் நடத்தி இருந்தால் பெரிய வசூல் இருந்திருக்கும் என ரசிகர்கள் ட்ரோல் செய்யும் அளவுக்கு இந்தி பெல்ட்டில் வெறும் 1.5 கோடி தான் பொன்னியின் செல்வன் படத்துக்கு முதல் நாளில் வசூல் வந்துள்ளதாக கூறுகின்றனர். ஆனால், இது நல்ல தொடக்கம் தான் பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக மற்ற மொழிகளிலும் படம் விரைவில் பிக் ஆகும் என்றும் கருத்துக்கள் பரவி வருகின்றன.

விக்ரம் வேதா வசூல்
அதே நேரத்தில் விக்ரம் வேதா படம் 12.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமீர்கானின் லால் சிங் சத்தா முதல் நாளில் 11.50 கோடி வசூலையும், அக்ஷய் குமாரின் ரக்ஷா பந்தன் திரைப்படம் 10 கோடி வசூலையும் பெற்றிருந்த நிலையில், ஹ்ரித்திக் ரோஷன் படம் வெயிட்டான ஓப்பனிங்கை பாலிவுட்டில் கொடுத்துள்ளது.

தசரா விடுமுறை
மேலும், தசரா விடுமுறை 10 நாட்கள் உள்ள நிலையில், விக்ரம் வேதா இந்தி வெர்ஷன் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வார் படத்திற்கு பிறகு வெளியாகி உள்ள ஹ்ரித்திக் ரோஷனின் விக்ரம் வேதா திரைப்படம் அந்த படத்தை போலவே வசூல் வேட்டை நடத்துமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.