twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விக்ரம் வேதா படம் நல்லாத்தான் இருக்கு..இருந்தாலும் வசூலில் தடுமாறுவது ஏன்?

    |

    மும்பை : இந்தியில் வெளியான விக்ரம் வேதா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த போதும் வசூலில் தடுமாறி வருகிறது.

    பாலிவுட் நட்சத்திரங்களான ஹிருத்திக் ரோஷன், சைஃப் அலிகானின் நடிப்பில் விக்ரம் வேதா திரைப்படம் இந்தி ரீமேக் செப்டம்பர் 30ந் தேதி வெளியானது.

    தமிழில் மிரட்டிய புஷ்கர் காயத்ரி தம்பதிகள் இந்தி ரசிகர்களுக்காக சில மாற்றங்களை செய்து, விக்ரம் வேதா திரைப்படத்தை உருவாக்கி உள்ளனர்.

     தென் கொரியாவின் சர்வதேசத் திரைப்பட விழா..விக்ரம் திரைப்படம் பங்கு பெறுகிறது தென் கொரியாவின் சர்வதேசத் திரைப்பட விழா..விக்ரம் திரைப்படம் பங்கு பெறுகிறது

    விக்ரம் வேதா

    விக்ரம் வேதா

    கடந்த 2017-ம் ஆண்டு புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம் வேதா. இப்படத்தில் விஜய்சேதுபதி சார் ஒரு கதை சொல்லட்டுமா என்று பேசும் வசனம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. மாதவன்,விஜய்சேதுபதி இருவரின் அசாத்தியமான நடிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

    ஹ்ரித்திக் ரோஷன், சயீஃப் அலிகான்

    ஹ்ரித்திக் ரோஷன், சயீஃப் அலிகான்

    தமிழில் இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அதே பெயரில் விக்ரம் வேதா இந்தி படம் வெளியாகி உள்ளது. இதில், மாதவன் கதாபாத்திரத்தில் சயீஃப் அலிகானும், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷனும் நடித்துள்ளனர். தமிழில் இசைஜாலம் செய்த இசையமைப்பாளர் சாம் சி எஸ் தான் இந்தியிலும் இசையமைத்துள்ளார்.

    வரவேற்பு இல்லை

    வரவேற்பு இல்லை

    செப்டம்பர் 30ந் தேதி வெளியான இத்திரைப்படம், மேற்கு வங்கம், ஹைதராபாத், மைசூர், ஆந்திரா பகுதிகளில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, ஆனால் வட மாநிலங்களில் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால், முதல் நாள் வசூல் சொல்லும்படி இல்லை. வார விடுமுறை தசரா பண்டிகை என்பதால் வசூலை குவிக்கும் என்று எதிர்பார்த்தால் வெள்ளிக்கிழமை 10.58 கோடியும், சனிக்கிழமை 12.51 கோடியும், ஞாயிற்றுக்கிழமை 13.85 கோடியும், மொத்தம்: ₹ 36.94 கோடியை மட்டுமே வசூலாகி ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    பொன்னியின் செல்வனால்

    பொன்னியின் செல்வனால்

    வரலாற்று திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று படம் பார்த்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் ,இந்தி என அனைத்து மொழிகளும் படம் நல்ல வசூலை வாரிக்குவித்து வருகிறது. சரியான பிளான் இல்லாமல் படத்தை பொன்னியின் செல்வன் வெளியாகும் நேரத்தில் வெளியிட்டதே விக்ரம் வேதா வசூல் பாதிக்க காரணம் என கூறப்படுகிறது.

    English summary
    Hrithik Roshan and Saif Ali Khan's film Vikram Vedha collection has been underperforming
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X