twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விக்ரம் வேதா இந்தி ரீமேக்கிற்கு வந்த சிக்கல்.. திட்டமிட்டபடி வெளியாகுமா?

    |

    மும்பை: நடிகர் ரித்திக் ரோஷனால் விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக பரவிய வரும் தகவலுக்கு இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.

    Recommended Video

    Surya Madhavan live | Rocketry | Celebrity | Filmibeat Tamil

    மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விக்ரம் வேதா இந்தி ரீ மேக்கில் ரித்திக் ரோஷன், சயிஃப் அலி கான் , ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்துள்ளனர்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொங்கிய படப்பிடிப்பு அபுதாபி, லக்னோ மற்றும் மும்பையில் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. படம் வரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதி ரிலீஸாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    தாமதமாகும் கோப்ரா பாடல் ரிலீஸ்...ஏன், என்னாச்சு...குழப்பத்தில் ரசிகர்கள் தாமதமாகும் கோப்ரா பாடல் ரிலீஸ்...ஏன், என்னாச்சு...குழப்பத்தில் ரசிகர்கள்

    புஷ்கர் - காயத்ரி

    புஷ்கர் - காயத்ரி

    தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் விக்ரம் வேதா. மாதவன், விஜய் சேதுபதி, வரலட்சுமி, கதிர் நடிப்பில் வெளியான இப்படம் அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடிகர் மாதவன் விக்ரமாகவும், விஜய் சேதுபதி வேதாவாகவும் போட்டி போட்டு நடித்து அசத்தி இருந்தனர்.

    விக்ரம் வேதா இந்தி ரீமேக்

    விக்ரம் வேதா இந்தி ரீமேக்

    தமிழில் ஹிட்டான இப்படம் தற்போது இந்தியில் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இப்படத்தையும் புஷ்கர் - காயத்ரி தான் இயக்கு வருகின்றனர். இப்படத்தில் விக்ரமாக சையிப் அலிகானும், வேதாவாக ஹிருத்திக் ரோஷனும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ரித்திக் ரோஷனால் எகிறிய பட்ஜெட்

    ரித்திக் ரோஷனால் எகிறிய பட்ஜெட்

    தமிழில் விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா படம் ரூ. 11 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இந்தியிலும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்க முடிவு செய்தார்கள். ஆனால் ரித்திக் ரோஷனால் பட்ஜெட் எகிறிவிட்டதாக கூறப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் படப்பிடிப்பை நடத்த இயக்குநர்கள் திட்டமிட்டிருந்த நிலையில், உத்தர பிரதேசத்திற்கு வர மாட்டேன் என்றும் அது போன்ற செட்டை துபாயில் அமைக்குமாறு ரித்திக் ரோஷன் கூறிவிட்டதாக கூறப்படுகிறது.

    காட்டுத்தீ போல பரவின தகவல்

    காட்டுத்தீ போல பரவின தகவல்

    அவரின் இந்த நிபந்தனையால் படத்தின் பட்ஜெட் கண்டமேனிக்கு அதிகரித்துவிட்டதாகவும், விக்ரம் வேதாவை இந்தியில் ரீமேக் செய்ய மட்டும் இதுவரைக்கும் ரூ.175 கோடியாகி செலவாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் காட்டுத்தீ போல பரவின.

    ஆதரமற்ற செய்திகள்

    ஆதரமற்ற செய்திகள்

    இந்நிலையில், விக்ரம் வேதா இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விக்ரம் வேதா படப்பிடிப்பில் குறித்து நிறைய ஆதரமற்ற செய்திகள் பரவி வருகின்றன. விக்ரம் வேதா படம் லக்னோ மற்றும் இந்தியாவின் பிற பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும்,துபாயில் ஒரு காட்சியை எடுக்க திட்டமிட்டுள்ளோம். அதற்காக செட் அமைக்கப்பட்டு வருவதாக கூறினார். அவர்கள் அளித்துள்ள விளக்கத்தால் ரித்திக் ரோஷன் குறித்த வதந்தி ஒய்ந்துள்ளது.

    English summary
    We have been noticing a lot of misleading and totally unsubstantiated reporting on Vikram Vedha shoot locations
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X