இந்தி விக்ரம் வேதா ட்ரெய்லர் அப்டேட் சொன்ன படக்குழு: ரசிகர்களோட மைண்ட் வாய்ஸ் இதுதான்
மும்பை: விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் தமிழில் வெளியான விக்ரம் வேதா திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது.
விக்ரம் வேதா இந்தி ரீமேக்கையும் புஷ்கர் காயத்ரியே இயக்க ஹிருத்திக் ரோஷன், சயிப் அலிகான் நடித்துள்ளனர்.

கோலிவுட்டை கலக்கிய விக்ரம் வேதா
விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் 2017ம் ஆண்டு வெளியான விக்ரம் வேதா, கோலிவுட் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றது. ஆக்சன் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருந்த இந்தப் படத்தில், விஜய் சேதுபதி, மாதவன் இருவரின் நடிப்பும் ரசிகர்களை சிலிர்க்க வைத்தது. இந்தப் படத்தை புஷ்கர் காயத்ரி தம்பதியினர் இயக்கியிருந்தனர். விக்ரம் வேதா படத்தின் வெற்றியில் பெரும்பங்கு திரைக்கதை தான் என விமர்சகர்கள் கூறினர்.

இந்தியில் ரீமேக்கான விக்ரம் வேதா
விக்ரம் வேதாவுக்கு தமிழில் கிடைத்த சிறப்பான வரவேற்பைத் தொடர்ந்து, இந்தியிலும் ரீமேக் செய்யப்படுவதாக புஷ்கர் காயத்ரி அறிவித்தனர். இதனையடுத்து ஹிருத்திக் ரோஷன், சயிப் அலிகான் நடிப்பில் இந்தி ரீமேக் வெர்ஷன் தொடங்கப்பட்டது. விஜய் சேதுபதி கேரக்டரில் ஹிருத்திக் ரோஷனும், மாதவன் ரோலில் சயிப் அலிகானும் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் 30ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

விக்ரம் வேதா ட்ரெய்லர் அப்டேட்
விக்ரம் வேதா படத்தின் ஒரிஜினல் வெர்ஷனில் விஜய் சேதுபதி, மாதவன் இருவருமே இயல்பாகவும் யதார்த்தமாகவும் நடித்திருந்தனர். ஆனால், சமீபத்தில் வெளியான விக்ரம் வேதா இந்தி டீசர், தமிழ் அளவுக்கு இல்லை என விமர்சனங்கள் எழுந்தன. ஆக்சன் காட்சிகளில் ஓவர் ஹீரோயிசம் இருப்பதாக ரசிகர்கள் கூறிவந்தனர். இந்நிலையில், தற்போது வெளியாகவுள்ள இந்தி ரீமேக் ட்ரெய்லராவது, தமிழ் விக்ரம் வேதா போல இருக்க வேண்டும் என பேசி வருகின்றனர்.

ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ் இதுதான்

Click it and Unblock the Notifications