விக்ரம் vs லியோ.. ஒவ்வொரு ஃபிரேமும் அப்படியே செதுக்கியிருக்காரே லோகேஷ்.. தெறிக்கும் கம்பேரிசன்ஸ்!
சென்னை: படத்தின் டைட்டில் அறிமுக வீடியோவிற்கே அதிகளவில் மெனக்கெட்டு ஒரு தரமான படைப்பை கொடுக்கப் போகிறோம் என்கிற நம்பிக்கையுடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உழைத்து வருவது ரசிகர்களை மட்டுமின்றி திரையுலகினரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
தளபதி 67 டைட்டில் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ஏகப்பட்ட பெயர்களை கெஸ் செய்து வைத்த நிலையில், லியோ என்கிற டைட்டிலை வைத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார் லோகேஷ் கனகராஜ்.
விக்ரம் படத்தின் அறிமுக ப்ரோமோ போலவே லியோ படத்தின் அறிமுக ப்ரோமோவும் வருமா என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அதை விட பெட்டர் வெர்ஷன் ஒன்னு தருகிறேன் என கொடுத்திருக்கிறார். இரண்டுக்கும் உள்ள ஒற்றுமைகளை ரசிகர்கள் தற்போது கம்பேர் செய்து போட்டு வருவதை இங்கே பார்ப்போம்.

ரெக்கார்டு மன்னன்
இந்தியாவிலேயே 7 மணி நேரத்திற்குள் அதிகம் லைக்குகளை அள்ளிய இன்ட்ரோ ப்ரோமோவாக லியோ ப்ரோமோ மாறி உள்ளது. 7 மணி நேரத்திற்குள் 1.1 மில்லியன் லைக்குகளை அள்ளி சாதனை படைத்துள்ளது. ஷாருக்கானின் ஜவான் மற்றும் விக்ரம் இன்ட்ரோ ப்ரோமோ ரெக்கார்டை இந்த படம் முந்தியுள்ளது.

டிரக் டீலர்
சாக்லேட் மூலமாக போதைப் பொருள் கடத்தலில் நடிகர் விஜய் ஈடுபட உள்ளார் இந்த படத்தில் என அறிமுக ப்ரோமோ வீடியோவை பார்த்தே ரசிகர்கள் விக்ரம் படத்துடன் கனெக்ட் செய்து வருகின்றனர். விக்ரம் அறிமுக ப்ரோமோ வீடியோவுக்கும் படத்துக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருந்த நிலையில், கதை வேறமாறி இருக்கும் என விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

கழுகு, சிங்கம், தேள், பாம்பு
கமல்ஹாசன் கழுகு, விஜய் சிங்கம், சூர்யா தேள் மற்றும் விஜய்சேதுபதி பாம்பு என லியோ படமும் எல்சியூ படம் தான் என ரசிகர்கள் இப்படியொரு போட்டோ மீமை டிரெண்டாக்கி வருகின்றனர். எல்சியூவாக இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி விஜய் படம் நல்லா வந்துடும் என்கிற நம்பிக்கை விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

விக்ரம் vs லியோ
விக்ரம் படத்தின் இன்ட்ரோ ப்ரோமோவும் கடைசியாக கமல் பேசும் ஆரம்பிக்கலாமா என்கிற வசனமும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. அதே போன்ற ஒரு ப்ரோமோவாக தளபதி 67 ப்ரோமோ இருக்க வேண்டும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதே ஸ்டைலில் வித்தியாசமான கான்செப்ட் மற்றும் காட்சிகளும் லியோ ப்ரோமோவை கொடுத்துள்ள நிலையில், இரு ப்ரோமோக்களிலும் உள்ள ஒற்றுமையை ரசிகர்கள் கம்பேர் செய்து வருகின்றனர்.

சேம் ஃபிரேம்
விக்ரம் படத்தின் அறிமுக ப்ரோமோவில் இடம்பெற்ற பல ஃபிரேம்களை அப்படியே லியோ படத்துக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தி உள்ளார். கழுகு பறக்கும் காட்சி இடம்பெற்றுள்ள நிலையில், கண்டிப்பாக இரு படங்களுக்கும் கனெக்ஷன் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏஜென்ட் டினா மற்றும் நெப்போலியன் கதாபாத்திரங்களில் நடித்த நடிகை சாந்தி மற்றும் ஜார்ஜ் மரியன் உள்ளிட்டோர் பட பூஜை மற்றும் காஷ்மீர் ஷூட்டிங் டீமில் இருந்தது ரசிகர்களை எல்சியூ தான் என கெஸ் செய்ய வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











