»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

"சேது நாயகன் விக்ரமுக்கு சினிமா எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் ஹீரோ ஹோன்டாவிமர்சகர் விருது வழங்கப்பட்டுள்ளது.

சினிமா எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் சார்பில் ஆண்டுதோறும், சினிமா கலைஞர்களுக்குவிருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழாசனிக்கிழமை சென்னையில் நடைபெறவுள்ளது.

20-வது ஹீரோ ஹோண்டா சினிமா எக்ஸ்பிரஸ் விருது என இதற்குபெயரிடப்பட்டுள்ளது.

விருது நிகழ்ச்சி குறித்து சினிமா எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் ஆசிரியர் ராமமூர்த்திசெய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தி நடிகர் தேவ் ஆனந்த் மற்றும் பிரபலஇயக்குநர் சுபாஷ் கய் ஆகியோருக்குச் சிறப்பு விருதுகள் கொடுக்கப்படுகின்றன.

தேவ் ஆனந்த்துக்கு ஹீரோ ஆப் தி செஞ்சுரி என்ற விருது வழங்கப்படுகிறது. கய்க்கு,25 ஆண்டுகாலம் சினிமாவில் சிறப்பு சேவை புரிந்தமைக்கான சிறப்பு விருதுவழங்கப்படுகிறது.

சேது படத்தில் நடித்த விக்ரம், ஹீரோ ஹோண்டா விமர்சகர் விருது பெறுகிறார். மூன்றுபேர் அடங்கிய விமர்சகர் குழு விக்ரமை இந்த விருதுக்குத் தேர்ந்தெடுத்துள்ளது.

வீரப்பன் பிடியிலிருந்து மீண்டு வந்துள்ள கன்னட நடிகர் ராஜ்குமாருக்கு சினிமாஎக்ஸ்பிரஸ் சார்பில் சிறப்பு வாழ்த்துச் செய்தி அனுப்பப்படும். கடந்த ஆண்டு நடந்தநிகழ்ச்சியில், சிறப்பு விருதை அவர் பெற்றது குறிப்பிடத்தக்கது என்றார் ராமமூர்த்தி.

யு.என்.ஐ.

Read more about: awards cinema entertainment

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil