For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  விளம்பரத்துக்காக ஏதோ பண்ணியிருக்காரு பாவம்.. அசீம் குறித்து விக்ரமன் என்ன இப்படி சொல்லிட்டாரு?

  |

  சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் அசீம் டைட்டில் வின்னராக ஆன நிலையில், விக்ரமன் ரன்னர் அப் ஆகி உள்ளார். இந்நிலையில், விஜய் டிவியின் இன்ஸ்டாகிராம் லைவ்வில் பேசிய விக்ரமன் அசீம் பற்றி பேசியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

  அசீம் டைட்டில் வென்றதில் விக்ரமனுக்கும் கொஞ்சம் கூட விருப்பமே இல்லை என்பது அவர் பேச்சில் இருந்தே தெரிகிறது என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  அசீம் உங்களை விட சிறப்பாக கேம் ஆடியதால் தான் மக்கள் ஓட்டுக்களை பெற்று டைட்டிலை வென்றார் என அசீம் ரசிகர்கள் விக்ரமனை விளாசி வருகின்றனர்.

  மாஸ் நடிகரின் அடுத்த அப்டேட் தாமதமாக அந்த விஷயம் தான் காரணமா? தீயாக பரவும் தகவல்! மாஸ் நடிகரின் அடுத்த அப்டேட் தாமதமாக அந்த விஷயம் தான் காரணமா? தீயாக பரவும் தகவல்!

  ரன்னர் அப்

  ரன்னர் அப்

  பிக் பாஸ் சீசன் 6 பார்க்கிறோமா சீசன் 4 பார்க்கிறோமா என்று ரசிகர்களுக்கு கன்ஃபியூஸ் ஆகும் அளவுக்கு அப்படியே ஆரி vs பாலா காட்சிகளே அரங்கேறின. ஆனால், ஆரி அளவுக்கு விக்ரமன் தனது கருத்துக்களை பவராக எடுத்து வைக்கவில்லை என்றும் அசீமை ஓடவிடவில்லை என்பதாலும் தான் அசீம் டைட்டிலை வென்றார். விக்ரமன் கொட்டாவி விட்டுக் கொண்டே ரன்னர் அப் ஆகிவிட்டார் என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

  விக்ரமன் லைவ்

  விக்ரமன் லைவ்

  விக்ரமன் வெளியே வந்த நிலையில், விஜய் டிவியின் இன்ஸ்டாகிராம் லைவில் சற்று முன் கோட் சூட் அணிந்து கொண்டு செம ஸ்மார்ட்டாக அப்படியே அம்பேத்கர் லுக்கில் அமர்ந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளித்துள்ள வீடியோ டிரெண்டாகி வருகிறது. அதில் தனக்கு மக்கள் கொடுத்த ஆதரவுக்கு மிகப்பெரிய நன்றியை கூறியுள்ளார்.

  அறம் வெல்லும் கோலம்

  அறம் வெல்லும் கோலம்

  பொங்கல் பண்டிகை அன்று நடைபெற்ற விஷயங்கள் குறித்து நண்பர்கள் சொன்னார்கள். ரொம்பவே சந்தோஷமாக இருந்தது. அத்தனை தாய்மார்களும், சகோதர சகோதரிகளும் தங்கள் வீட்டுக்கு வெளியே அறம் வெல்லும் என கோலம் போட்டது ரொம்பவே பெரிய விஷயம். என்னை அவங்க வீட்டுப் பிள்ளையாக நினைத்ததால் தான் அப்படியொரு விஷயத்தை செய்தனர் என்றார். நான் தோற்றதாகவே நினைக்கல, நாமதான் ஜெயிச்சோம். அறம் வென்றது என்று பேசினார்.

  தோழி தோள் கொடுப்பேன்

  தோழி தோள் கொடுப்பேன்

  ஷிவின் பற்றி என்ன நினைக்கிறீங்க பிக் பாஸ் வீட்டில் உங்க ஃபேவரைட் யார் என கேட்டதும் ஷிவின் தான் ஃபேவரைட். பிடித்தவர்கள் என்றால் அமுதவாணன், ஏடிகே, மகேஸ்வரி உள்ளிட்டவர்கள் ரொம்ப பிடிக்கும் என பேசிய விக்ரமன் ஷிவின் பற்றி கேட்டதும் தோழி.. தோள் கொடுப்பேன் என பேசினார்.

  விளம்பரத்துக்காக பண்ணிட்டார்

  விளம்பரத்துக்காக பண்ணிட்டார்

  அடுத்து அசீம் பற்றி சொல்லுங்க என கேட்டதற்கு அனைவரையும் அதிர்ச்சியடைய செய்யும் விதமாக விளம்பரத்துக்காக ஏதோ பண்ணிட்டார் பாவம் என விக்ரமன் பேசியது பிக் பாஸ் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. விக்ரமனின் இந்த பேச்சு அசீம் ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளது. பலரும் விக்ரமனை விளாசி வருகின்றனர்.

  அவரும் நல்லவர் தான்

  அவரும் நல்லவர் தான்

  அமுதவாணன் சிறந்த கலைஞர், மைனா தங்கச்சி, கதிருக்கு நல்ல எதிர்காலம் இருக்கு, ஏடிகே இன்னொரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரர் என பேசிய விக்ரமன் அசீம் பற்றி பேசியது பின் விளைவை ஏற்படுத்தப் போகிறது என்பதை உணர்ந்து கொண்டு உடனடியாக அவரும் நல்லவர் தான். அதனால், தான் மக்கள் அவருக்கு வாக்களித்துள்ளனர். அதிலும், தான் வென்ற 50 லட்சத்தில் 25 லட்சத்தை கொரோனாவில் பாதித்தவர்களின் குழந்தைகளின் படிப்பு செலவுக்காக செலவழிக்கப் போவதாக கூறியுள்ளார். அது பெரிய விஷயம் என பாராட்டி சேஃப் ஆகி விட்டார்.

  பாய்காட் என்ன ஆச்சு

  பாய்காட் என்ன ஆச்சு

  பாய்காட் விஜய் டிவின்னு கம்பு சுத்திட்டு இருந்த பூமர் விக்ரமன் ரசிகர்கள் எல்லாம் ஏன் இப்போ விஜய் டிவி இன்ஸ்டா பக்கம் வந்து அறம் வெல்லும் என கமெண்ட் போட்டுட்டு இருக்கீங்க, விஜய் டிவி பக்கம் வரவே கூடாது நீங்க என அசீம் ஆர்மியினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். பிக் பாஸ் ஜோடிகள் ஆரம்பித்தால் பிக் பாஸில் சண்டை போட்டவர்களே ஒன்றாக கூடி டான்ஸ் ஆடுவதும் நட்பாக இருப்பதையும் பார்த்தும் ரசிகர்கள் இன்னமும் இந்த ரியாலிட்டி ஷோ டிராமாவை உண்மைன்னு நம்புறாங்களே என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

  English summary
  Vikraman critize Azeem's Bigg Boss Tamil 6 Title Winner victory in live shocks fans. Vikraman says, Azeem did it for publicity in his instagram live on Vijay Television. Azeem fans slams Vikraman for his comments.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X