»   »  திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தல்... விக்ரமன் தலைவராகத் தேர்வு

திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தல்... விக்ரமன் தலைவராகத் தேர்வு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தலில் இயக்குநர் விக்ரமன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த தேர்தல் சென்னை கே.கே.நகரில் உள்ள சமூக நலக்கூடத்தில் நேற்று நடந்தது. ஓட்டுப்பதிவு காலையில் தொடங்கி மாலையில் முடிவடைந்தது. பின்னர் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன.

மொத்தம் 292 ஓட்டுக்கள் பதிவாகின. இதில், சங்கத்தின் தலைவராக இயக்குநர் விக்ரமன் 205 ஓட்டுக்கள் வாங்கி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மோகன் காந்திராமன் 87 ஓட்டுக்கள் பெற்றார்.

Vikraman elected as Cinema Writers Assn president

செயலாளராக கவிஞர் பிறைசூடன் 150 ஓட்டுக்கள் வாங்கி வெற்றி பெற்றார். துணை தலைவர் பதவிக்கு பஞ்சு அருணாச்சலம், யார் கண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நிலை செயலாளர்களாக பா.விஜய், சண்முகசுந்தரம், ரங்கநாதன், பிரபாகரன் ஆகியோர் தேர்வானார்கள்.

பொருளாளர் பதவிக்கு ரமேஷ்கண்ணா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

English summary
Director Vikraman was selected as Cinema writers association president on yesterday.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil