»   »  தமிழ் சினிமா இயக்குநர்கள் சங்கத் தேர்தல்.. விக்ரமன், செல்வமணி அபார வெற்றி

தமிழ் சினிமா இயக்குநர்கள் சங்கத் தேர்தல்.. விக்ரமன், செல்வமணி அபார வெற்றி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமா இயக்குநர்கள் சங்கத்துக்கான தேர்தலில் தலைவராக விக்ரமனும், பொதுச் செயலாளராக ஆர் கே செல்வமணியும் வெற்றிப் பெற்றுள்ளனர்.

தமிழ் சினிமா இயக்குநர்கள் சங்கத்தின் 21 பதவிகளுக்கான தேர்தல் நேற்று ஞாயிற்றுக் கிழமை நடந்தது. ஏற்கெனவே தலைவராக உள்ள விக்ரமனே இந்த முறையும் தலைவர் பதவிக்கு நின்றார். அவரது புது வசந்தம் அணி சார்பில் பொதுச் செயலாளர் பதவிக்கு ஆர்கே செல்வமணி போட்டியிட்டார். மொத்தம் 2390 வாக்குகளில் 1637 வாக்குகள் பதிவாகின.

Vikraman elected as Director Association President

இதில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட முரளியை விட 1532 வாக்குகள் அதிகம் பெற்று விக்ரமன் தலைவராக வெற்றிப் பெற்றார்.

பொதுச் செயலாளராக ஆர்கே செல்வமணி வெற்றிப் பெற்றார்.

பொருளாளர் பதவிக்கு விக்ரமன் அணியைச் சேர்ந்த இயக்குநர் பேரரசு 1075 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார்.

மற்ற பதவிகளுக்கு வாக்குகள் எண்ணும் பணி இன்னும் முடிவடையவில்லை. இன்று பிற்பகலுக்குள் முழு முடிவுகளும் தெரிந்துவிடும்.

English summary
Vikraman has been won in the election for Tamil Cinema Directors Association President post

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil