For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அசீமிடம் அடங்கிய விக்ரமன்..எங்கே போச்சு பெண் உரிமை பேசும் உங்கள் வீரம்?..கிழிக்கும் நெட்டிசன்கள்

  |

  பிக்பாஸ் வீட்டில் நேற்று நடந்த களேபரத்தில் விக்ரமன் அசீமிடம் வாடா போடா என வாங்கிக்கட்டிக்கொண்டார்.

  விக்ரமன் அசீமை எதிர்க்க திராணியில்லாமல், பெண் போட்டியாளர்களை அசீம் அவதூறாக பேசியதையும் அவர் தட்டி கேட்கவே இல்லை.

  விக்ரமனின் இந்த செயல்பாட்டை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். இதுதான் உங்கள் பெண் உரிமை பார்வையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  சிறையில் தள்ளி ஜனனியை புலம்பவிட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி.. நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு! சிறையில் தள்ளி ஜனனியை புலம்பவிட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி.. நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு!

   6 -வது சீசனிலும் முதுகெலும்பில்லாத போட்டியாளர்கள்

  6 -வது சீசனிலும் முதுகெலும்பில்லாத போட்டியாளர்கள்

  பிக்பாஸ் வீட்டில் கடந்த ஐந்து சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த சீசன் போட்டியாளர்கள் விறுவிறுப்பாக இருக்கிறார்கள், கடந்த சீசன் போட்டியாளர்கள் போல சுயநலவாதிகளாகவும், கேள்வி கேட்க பயந்து போகும் செம்மறி ஆட்டு மனநிலையிலும் இருப்பதை காண முடிகிறது. ஆனால் அதையெல்லாம் தாண்டி அசல் கோலார் போன்றவர்கள் உருவக்கேலி செய்வதும், அசீம் போன்றவர்கள் பெண்களை பொதுவெளியிலேயே அவதூறாக பேசுவதையும் காண முடிந்தது.

   பெரியார், அம்பேத்கர் கருத்தியல்வாதி தவறை தட்டிக்கேட்காதது ஏன் -நெட்டிசன்கள்

  பெரியார், அம்பேத்கர் கருத்தியல்வாதி தவறை தட்டிக்கேட்காதது ஏன் -நெட்டிசன்கள்

  இந்த சீசனில் புதிய விஷயம் என்னவென்றால் அரசியல்வாதி ஒருவர் அதுவும் பெரியார், அம்பேத்கர் கருத்துகளை முன்னிறுத்தி பேசுபவர் உள்ளே வருகிறார், தட்டி கேட்பார் பல விஷயங்களை பார்க்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். மற்றொரு முக்கியமான விஷயம் திருநங்கை ஷிவின் கணேசன் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தது. அவர் தாக்குப்பிடிப்பாரா அல்லது நமிதா மாரிமுத்துபோல் வெளியேறுவாரா? என்றெல்லாம் விவாதம் எழுந்தது. ஆனால் வீட்டின் நம்பர் ஒன் போட்டியாளராக அவர் உருவெடுத்து வருகிறார்.

   விக்கிரமனை புழுவைப்போல நடத்திய அசீம்

  விக்கிரமனை புழுவைப்போல நடத்திய அசீம்

  விசிக பிரமுகர் என்பதால் விக்கிரமனிடம் வாசகர்கள் அதிகம் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் எங்கே பேசவேண்டும் என்பது கூட தெரியாமல் பல இடங்களில் பல்பு வாங்கினார். இந்நிலையில் நேற்று நடந்த ஒரு போட்டியில் அவரை அசீம் வம்புக்கு இழுத்து வாடா, போடா என திட்டினார். அதன் பின்னர் பெண் போட்டியாளர் ஆயிஷாவை அசீம் வாடி போடி என திட்டி உடல் ரீதியாக அவரை அடிப்பதுபோல் பயமுறுத்தினார். ஆனால் இதுபற்றி லேசாக வாய்த்திறந்த விக்கிரமனை எளிதாக புழுவைப்போல் நடத்தினார் அசீம்.

   ஆயிஷாவுக்கு குரல் கொடுத்தவரை மிரட்டிய அசீம்..அட அடங்கிப் போய்விட்டாரே விக்ரமன்

  ஆயிஷாவுக்கு குரல் கொடுத்தவரை மிரட்டிய அசீம்..அட அடங்கிப் போய்விட்டாரே விக்ரமன்

  "டேய் உனக்கு என்னதாண்டா பிரச்சினை, வெள்ளைச் சட்டை போட்டா நீ என்ன பெரிய டானா? போடா" என்று அசீம் பேச லேசாக முண்டிப்பார்த்த விக்கிரமன் அடங்கிப்போனார். அதைவிட கொடுமை இடையில் அசீம் சும்மாதான் பேசினேன் கோபப்படாதே என்று சொன்னவுடன் விக்கிரமன் பல்லைக்காட்டி ஓக்கே ஓக்கேன்னு கட்டிப்பிடிச்சுகிட்டார். ஒரு பெண்ணை திட்டும் போது மவுனமாக இருந்த அரசியல் போராளி விக்ரமனைவிட வீரியமாக தனலட்சுமியும், ஷிவினும், மைனாவும் அசீமிடம் தங்கள் எதிர்ப்பை காண்பித்தார்கள்.

   எதுக்கு பொங்கணுமோ அதற்கு பொங்காத விக்ரமன்

  எதுக்கு பொங்கணுமோ அதற்கு பொங்காத விக்ரமன்

  ஆனால் விக்கிரமனும் பொங்கி எழுந்தார் எப்போது என்றால் அவரை சிறைக்கு அனுப்ப டீம் முடிவெடுத்தபோது தான் அரசியலில் கற்ற அத்தனை வித்தைகளையும் காட்டி தன் பேச்சுத்திறமையைக்காட்டி தப்பித்தார். ஆனால் ஒரு பெண் கண்ணெதிரில் பாதிக்கப்படுவதும், அதை தட்டிக்கேட்கும் தனலட்சுமியை அசல் கோலார் போன்றோர் அப்படித்தான் அசீம் பேசுவார் என்று சண்டைபோட்டபோது விக்கிரமனிடம் இருந்த பெண்ணுரிமை எங்கே போனது என்றே தெரியவில்லை என நெட்டிசன்கள் வறுத்தெடுக்கிறார்கள்.

   அசீமை வீரனாக்கி விக்ரமை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

  அசீமை வீரனாக்கி விக்ரமை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

  சில நெட்டிசன்கள் அசீமை பாராட்டி தள்ளுகிறார்கள். விக்கிரமன் சாதாரண போட்டியாளர் உன்னை வச்சி செஞ்சுட்டாரே, உங்கள்வீரம் எங்கே என்று கேலி செய்கிறார்கள், பலரும் ஷிவினையும், தனலட்சுமியையும் பாராட்டி வருகின்றனர். பெரியார் , அம்பேத்கர் சிலைமுன் அமர்ந்து ப்ரமோ கொடுத்த விக்கிரமன் ஒரு பெண் பாதிக்கப்பட்டபோது மற்ற போட்டியாளர்கள்போல் ஒதுங்கி போனது அவர் அரசியல் வாழ்க்கையில் ஒரு சறுக்கல் என்று நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர். இதை தட்டிக்கேட்டு விக்ரமன் ஸ்கோர் பண்ணியிருக்கலாம் என்று ஒரு சாரர் கருத்து தெரிவிக்கின்றனர்.

  English summary
  Vikraman called Aseem vada boda during the dispute in the Bigg Boss house yesterday. Vikraman doesn't have the guts to challenge Aseem and doesn't listen to Aseem's slurs about the female contestants. Netizens are teasing this action of Vikraman. They question whether this is your view on women's rights.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X