twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜி.பி.முத்துவை சீண்டிய விக்ரமன்..கடைசியில் அவமானமா போச்சே

    |

    ஆயிஷா தனலட்சுமி இருவருக்கும் நியாயம் சொல்கிறேன் பேர்வழி என்கிற முறையில் இருவரையும் அழைத்து நியாயம் கேட்டார் விக்ரமன்.

    இருவரும் தங்கள் தரப்பில் உள்ள விஷயங்களை சொல்ல அங்கிருந்த ஜனனியை என்ன நீங்க இந்த மாதிரி செஞ்சிட்டீங்க என்று இரண்டு பேர் சார்பாக வக்கீல் போல் விக்ரமன் கேட்டார்.

    இந்த வாதம் நீண்ட நிலையில் யாருமே விக்ரமனை மதிக்கவில்லை. நான் நியாயம் கேட்பேன் என்று கிளம்பியவர் பிறகு சும்மா இருந்துவிட்டார்.

    ஆட்டிடியூட் காட்டும் அசல் கோளார்..கதறி அழுத்த ஆயிஷா..சரியான கோளாறு தான்..விளாசும் நெட்டிசன்ஸ்!ஆட்டிடியூட் காட்டும் அசல் கோளார்..கதறி அழுத்த ஆயிஷா..சரியான கோளாறு தான்..விளாசும் நெட்டிசன்ஸ்!

     பிக்பாஸ் ரிவ்யூ மீட்டிங்கில் தனலட்சுமியை வறுத்தெடுத்த ஜனனி

    பிக்பாஸ் ரிவ்யூ மீட்டிங்கில் தனலட்சுமியை வறுத்தெடுத்த ஜனனி

    பிக் பாஸ் வீட்டில் தினமும் நடக்கும் ரிவ்யூ மீட்டிங்கில் நேற்று முன்தினம் இரவு ஜிபி.முத்துவே காரணம் என்று வெளியேற்றினார் ஜனனி. மறுநாள் ஜி.பி.முத்து தனது பக்க நியாயத்தை சொல்ல அதை புரிந்து கொண்ட ஜனனி அன்று இரவு ஜிபி.முத்துவை மீண்டும் உள்ளே அழைப்பதாக சொல்லி தனலட்சுமிக்கு சில அறிவுரைகளை சொல்லி வெளியேற்றினார். அப்படி அவர் கூறும் பொழுது வயது வித்தியாசம் அண்ணன், தம்பி, பெற்றவர்கள் வயதில் உள்ளவர்கள் வா, போ என்று சொல்வதை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதுபோல் கூறுபவர்களுடன் வாதம் செய்வதும் தவறு என்று சொன்னார்.

     கட்டப்பஞ்சாயத்து செய்ய நினைத்த விக்ரமன்

    கட்டப்பஞ்சாயத்து செய்ய நினைத்த விக்ரமன்

    இந்த கூட்டம் அனைத்து உறுப்பினர்களும் இருக்கும்போது நடந்தது. அதில் விக்ரமனும் இருந்தார். ஆனால் அன்று இரவு விக்கிரமன் ஏதோ புதிதாக வெளியிலிருந்து வந்தவர் போல் திடீரென ஆயிஷா, தனலட்சுமி இருவரையும் அழைத்து என்ன நடந்தது? கொஞ்சம் விரிவா சொல்லுங்க அப்படின்னு சொல்ல, ஆயிஷாவும், தனலட்சுமியும் ஜிபி.முத்து மரியாதை இல்லாம பேசி தனலட்சுமி அடிக்க பாய்ஞ்சாறு அத கேட்டதுக்கு மரியாதை இல்லாம பேசுராறு, அதை வைத்து ஜனனி தனலட்சுமியை வெளியேற்றிவிட்டார். இன்னொரு புறம் ரீல்ஸ் பத்தி இவங்க பேசுறாங்க என்று ஜனனியை பற்றி குறை சொனார்கள். "ஜனனி எப்படி இந்த மாதிரி தப்பா முடிவெடுத்து இருக்கீங்க? ஒரு சைடு கேட்டுட்டு" என்று விக்ரமன் வழக்கறிஞர் போல் ஜனனியை கூப்பிட ஜனனி மிரண்டு போய் ஏதோ பதில் சொல்ல, எனக்கு சரியா புரியல என்று விக்கிரமன் சொல்லி வாதம் செய்தார்.

     ஜனனியை காப்பாற்றிய அமுதவாணன்

    ஜனனியை காப்பாற்றிய அமுதவாணன்

    நான் சொல்வது உங்களுக்கு விளங்கவில்லை என்று அவர் இலங்கை தமிழில் சொல்ல, எங்க எனக்கு விளங்க வையுங்கள் பார்ப்போம் என்று நக்கலாக விக்ரமன் சொல்லிவிட்டு, அது எப்படி நீங்க ரீல்ஸ் என்று சொல்லலாம்? எப்படி இவர்களை பேச்சைக் கேட்காமல் ஒரு தரப்பாக பேசலாம்? என்று அடுக்கடுக்காக விக்ரம் கேட்க ஆயிஷாவும், தனலட்சுமி ஜனனி பிடித்து வாதம் செய்ய ஜனனி மிரண்டு போனார். அந்த நேரத்தில் அங்கிருந்த அமுதவாணன் இதுபோன்று தனியாக இருக்கும் பெண்ணை சம்பந்தமில்லாத நீங்கள் (விக்ரமன்) மூன்று பேரை வைத்துக் கொண்டு கார்னர் செய்வது சரியல்ல என்று கூறினார். சம்மந்தப்பட்டவர்கள் இல்லாத இடத்தில் நீங்கள் எப்படி பேசலாம், அப்படி பேசுவதென்றால் ஜி.பி. முத்துவையும் அழைத்து வைத்து நியாயம் கேளுங்கள் என்று சொல்ல ஜிபி முத்துவை கூப்பிடுகிறேன் என்று விக்கிரமன் சென்றார்.

     விக்ரமனை காலி செய்த ஜி.பி.முத்து

    விக்ரமனை காலி செய்த ஜி.பி.முத்து

    ஆனால் ஜி.பி.முத்து இந்த விவகாரத்தை பேசி முடித்து அந்த கூட்டத்தில் பிக் பாஸும் ஒத்துக்கொண்டார். இதற்கு மேல் இது பிரச்சனை என்றால் சனிக்கிழமை தான் இந்த பிரச்சனை பற்றி பேச வேண்டும், இடையில் நீங்கள் புகுந்து தேவையில்லாத பிரச்சினை கிளப்பாதீர்கள். அது முடிந்து போன விஷயம் என்று அவருக்கு எடுத்துரைத்தார். ஆனாலும் விக்கிரமன் நான் கேட்பேன். யாருக்கு பாதிப்பு வந்தாலும் கேட்பேன் என்று பேசிக் கொண்டிருந்தார்.

     திடீர் நியாயவான் விக்ரமன் கேலி செய்த ஜி.பி.முத்து

    திடீர் நியாயவான் விக்ரமன் கேலி செய்த ஜி.பி.முத்து

    யாருக்கு பாதிப்பு வந்தாலும் கேட்பேன் என்றால் அந்த கூட்டத்தில் இருந்தீர்கள் அல்லவா அப்பொழுது கேட்காமல் இப்போது தனியாக வந்து கேட்பது என்ன நியாயம்? என்று டீமில் உள்ள சிலர் கேட்பதையும் காண முடிந்தது. இந்த விவகாரத்தில் விக்ரமன் பெரிதாக கேள்வி கேட்பேன் நியாயம் கேட்பேன் என்று கிளம்பி கடைசியில் ஒன்றுமில்லாமல் போனார். ஒரு கட்டத்தில் ஜிபி முத்து இவர் இருப்பை காண்பித்துக் கொள்வதற்காக நானும் இருக்கிறேன் என்பதற்காக எதாவது ஒரு பிரச்சனை கிளப்பலாம் என்று நினைக்கிறார் அது நடக்காது என்று சொல்லி சிரித்தார்.

    English summary
    Vikraman called both Ayesha Thanalakshmi and asked for justice. Vikraman, acting as a lawyer on behalf of two people, asked Janani, who was there to tell their side of the story. No one respects Vikraman as this argument goes on. The person who left saying that I will ask for justice then remained idle.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X