»   »  ராமராஜனின் பட்டப்பெயரைப் பிடுங்கிக் கொண்ட வில்லன்!

ராமராஜனின் பட்டப்பெயரைப் பிடுங்கிக் கொண்ட வில்லன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

80, 90 களில் ராமராஜன்தான் ஹாட் ஹீரோ. அவரது சுமாரான படங்கள் கூட சூப்பர் ஹிட். அவரது காலம் ஒரு பத்தாண்டுகள்.

அவர் ஓஹோவென்றிருந்த நாட்களில் அவருக்கு அளிக்கப்பட்ட பட்டப் பெயர்தான் மக்கள் நாயகன். அந்தப் பெயர் வெறும் பட்டப் பெயர் மட்டுமல்ல...அவருக்கு நிஜமாகவே பொருத்தமான பெயராகவும் இருந்தது. அப்புறம் எங்கிருக்கிறார் மனிதர் என்றே தேட வேண்டிய நிலை.

Villain actor uses Ramarajan's nickname

இப்போது அந்தப் பட்டப் பெயரை ஒரு நடிகர் தட்டிப் பறித்துள்ளார். அவர் வில்லனாக இருந்து ஹீரோவாக புரமோஷன் பெற்றுள்ள ஆர்கே சுரேஷ்.

சில மாதங்களுக்கு முன் வெளியான 'அட்டு ' படம் பரவலான கவனம் பெற்றது. இத் திரைப்படத்தை இயக்கிய ரத்தன்லிங்கா இரண்டாவது திரைப்படம் தொடங்கி விட்டார். ஆர்கே சுரேஷை நாயகனாக்கி அவர் இயக்கும் இந்தப் படத்துக்கு 'டைசன்' என்று தலைப்பிட்டுள்ளனர்.

பிரமாண்டபொருட்செலவில் இப்படம் வளர்கிறது. 'பில்லாபாண்டி', 'வேட்டைநாய் போன்ற படங்களில் நாயகனாக நடித்து வரும் ஆர்.கே.சுரேஷுக்கு இந்தப் படத்தில்தான் மக்கள் நாயகன் என்ற பட்டத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

English summary
Villain actor turned hero RK Suresh is now using Ramarajan's nickname in his forthcoming movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X