Don't Miss!
- Sports
கம்பேக் தந்து என்ன பயன்.. இந்திய அணியில் புறக்கணிக்கப்படும் பிரித்வி ஷா எனும் புயல்.. 3 முக்கிய காரணம்
- News
அதிமுக கூட போய் கேட்கலையாமே.. ஈரோட்டில் விஜயகாந்திற்கு இருக்கும் "வாய்ஸ்".. தேமுதிகவின் புது ரூட்?
- Finance
3000 ஊழியர்கள் பணிநீக்கம்.. SAP அறிவிப்பால் டெக் ஊழியர்கள் அதிர்ச்சி..!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Technology
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
மொட்டை ராஜேந்திரன் மொட்டைக்கு காரணம் இதுதான்.. பாவம்யா அந்த மனுஷன்!
சென்னை : மொட்டை ராஜேந்திரனின் தலை மொட்டையாக இருப்பதற்கு என்ன காரணம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் மொட்டை ராஜேந்திரன். பாலா இயக்கத்தில் உருவான நான் கடவுள் படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்து பிரபலமானார்.
வில்லனாக அறிமுகமான மொட்டை ராஜேந்திரன், பின் நாளில் காமெடி நடிகராக மாறி நகைச்சுவையில் கலக்கி வருகிறார்.
800 கோடி எங்கே.. 187 கோடி எங்கே.. சூப்பர்ஸ்டார் ஆக ஆசைப்படலாமா விஜய்.. மீசை ராஜேந்திரன் விளாசல்!

மொட்டை ராஜேந்திரன்
கரடு முரடான தேகம், மொட்டை தலை, கரகரப்பான குரல் என வில்லனுக்கு ஏற்ற அத்தனை அம்சமும் பக்காவாக இவருக்கு பொருந்தி உள்ளது. 1992ம் ஆண்டு அமர்க்களம் படத்தில் அடியாளாக கூட்டத்தில் ஒருவராக நடித்துள்ளார். அதன் பின், திருமதி பழனிச்சாமி, ஜென்டில்மேன், வேட்டையாடு விளையாடு போன்ற படங்களிலும் அடியாளாகவே நடித்துள்ளார்.

கொடூர வில்லன்
மொட்டை ராஜேந்திரனுக்கு திருப்பு முனையை ஏற்படுத்தி படம் தான் 'நான் கடவுள்' இந்த படத்தின் மூலம் தான் பட்டிதொட்டி எங்கும் கொடூர வில்லனாக பெயர் எடுத்தார். இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய மொட்டை ராஜேந்திரனுக்கு தமிழக அரசு சிறந்த வில்லனுக்கான விருதை கொடுத்து கௌரவித்தது.

காமெடியும் வரும்
கொடுமையான வில்லனாக நடித்த மொட்டை ராஜேந்திரன் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் காமெடியிலும் அசத்தி வில்லத்தனம் மட்டுமல்ல காமெடியும் எனக்கு பக்காவாக வரும் என்பதை நிரூபித்து இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ராஜா ராணி, டார்லிங், திருடன் போலீஸ், வெள்ளைக்காரதுரை என எடுத்தடுத்த படங்களில் நகைச்சுவையில் அசத்தி இருந்தார்.

படவாய்ப்புகள் இல்லை
வித்தியாசமான வாய்ஸில் இவர் பேசும் வசனங்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது, இவருக்கு ஏராளமான குழந்தை ரசிகர்களும் இருக்கிறார்கள். விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள் பலருடனும் இணைந்து நடித்திருந்த, மொட்டை ராஜேந்திரன் இப்போது படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருக்கிறார்.

மொட்டைக்கு காரணம் இதுதான்
சமீபத்தில் இவர் வரலாறு முக்கியம் படத்தில் நடித்திருந்த மொட்டை ராஜேந்திரன் அளித்துள்ள பேட்டியில், மொட்டை தலை குறித்து கூறியுள்ளார். அதில், சினிமாவிற்குள் வரும் போது தலையில் முடி இருந்ததாகவும், ஆனால், ரெட் இந்தியன் என்ற மலையாள திரைப்படத்தில் அடியாளா நடித்திருந்தேன் அப்போது, கதாநாயகனிடம் அடி வாங்கி ஒரு குளத்தில் விழுவது போல காட்சி ஒன்றில் நடித்து குளத்தில் விழுந்தேன். அந்த குளத்தில் ரசாயன நீர் தேங்கியிருந்ததால் அதன் பின் என் உடலில் அலர்ஜிகள் ஏற்பட்டு முடிகள் கொட்ட துவங்கி வழுக்கை ஆகிவிட்டதாகவும். அதிகமாகவே முடி கொட்டவே மொட்டை அடித்துக்கொண்டு திரைப்படங்களில் நடித்ததாக கூயியுள்ளார். இதைக்கேட்ட ரசிகர்கள் பாவம்யா அந்த மனுஷன் என்று கூறியுள்ளனர்.