»   »  கொஞ்சம் காதல்... நிறைய அரசியல்... ‘காதலி காணவில்லை’....நல்ல மெசேஜ்!

கொஞ்சம் காதல்... நிறைய அரசியல்... ‘காதலி காணவில்லை’....நல்ல மெசேஜ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னை காதலித்து ஏமாற்றிய பெண்ணை ரவுடி ஒருவர் பழி வாங்குகிறாரா என்பதை கதைக்களமாகக் கொண்டு தயாராகி வருகிறது ‘காதலி காணவில்லை' படம்.

இப்படத்தில் நடிகர் கிஷோர் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஹார்த்திகா நடித்துள்ளார். இவர்கள் தவிர ஜி.ஆர், சோப்ராஜ், ரேகா, அபூர்வா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஆர்.பி.பூரணி தயாரித்துள்ள இப்படத்தை ரவிராஜா இயக்குகிறார்.

அனாதை இளைஞர்...

அனாதை இளைஞர்...

தனது படம் குறித்து ரவிராஜா கூறுகையில், ‘பீஷ்மர் என்ற உறவுகள் அற்ற இளைஞருக்கு, ராவணன் என்ற அமைச்சர் அடைக்கலம் தருகிறார். பீஷ்மரை ரவுடியாக வளர்க்கும் அமைச்சர், அவன் மூலமாக முதலமைச்சராக திட்டமிடுகிறார்.

குறுக்கே வந்த காதல்...

குறுக்கே வந்த காதல்...

இந்த சூழ்நிலையில், பீஷ்மர் வாழ்க்கையில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள். அவளது காதல் ரவுடியை திருத்தி நல்லவனாக்குகிறது.

திடீர் திருப்பம்..

திடீர் திருப்பம்..

இதனால், கோபமடைந்த அமைச்சர் அப்பெண்ணைக் கொல்ல முடிவு செய்கிறார். இந்த சூழ்நிலையில் திடீரென ரவுடியிடம் இருந்து விலகும் அப்பெண், வேறொருவரை மணக்கிறாள்.

முன்னாள் காதலியின் கணவர்...

முன்னாள் காதலியின் கணவர்...

இதனால் மீண்டும் ரவுடியாக மாறும் ஹீரோ, அமைச்சர் திட்டப்படி சிபிஐ அதிகாரி ஒருவரைக் கொல்லச் செல்கிறான். அப்போது, அந்த சிபிஐ அதிகாரி தான் தனது முன்னாள் காதலியின் கணவர் என பீஷ்மருக்கு தெரிய வருகிறது.

பழி வாங்கினானா ?

பழி வாங்கினானா ?

அதனைத் தொடர்ந்து ரவுடி பீஷ்மர் என்ன முடிவெடுத்தான். முன்னாள் காதலியைப் பழி வாங்க சிபிஐ ஆபிசரைக் கொன்றானா என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ்.

கதைக்கரு...

கதைக்கரு...

இளைஞர்களை அதிகம் சீரழிப்பது அரசியலும், அரசியல்வாதிகளும் தான் என்பதை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப் படுகிறது.

நல்ல மெசேஜ்...

நல்ல மெசேஜ்...

அப்பாவி இளைஞர்களுக்கு பணம், பெண், போதை போன்றவற்றைக் கொடுத்து ரவுடிகளாக மாற்றும் அரசியல்வாதிகளிடமிருந்து இளைஞர்களை மீட்க பெண் ஒருவரும் போராடும் கதை. நல்ல மெசேஜ் சொல்லும் கமர்ஷியல் படம்' என இவ்வாறு ரவிராஜா தெரிவித்துள்ளார்.

பாடல் வெளியீட்டு விழா...

பாடல் வெளியீட்டு விழா...

சமீபத்தில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. காதலி காணவில்லை படப் பாடல்களை கவர்னர் ரோசைய்யா வெளியிட பாடகி சுசீலா பெற்றுக் கொண்டார். இப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார்.

English summary
Kishore Kumar, famous from his portrayal as a villain in Polladhavan, is currently acting in the movie titled Kadhali Kanavillai, which, according to the director Ravi Raja, is in the finishing stages.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil