twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினிக்கே டஃப் கொடுத்த.. மிரட்டும் வில்லன் செந்தாமரை… ஒரு குட்டி ரவுண்டப் !

    |

    சென்னை : சினிமாவை பொறுத்தவரை எப்போதுமே ஹீரோக்களுக்குத்தான் மவுசு அதிகமாக இருக்கும். ஆனால், கதாநாயகனுக்கே டஃப் கொடுக்கும் வில்லன்கள் சும்மா, கெத்தா மாஸா இருக்க வேண்டும் அப்போதுதான் கதையில் ஒரு சுவாரஸ்யம் இருக்கும்.

    அப்படி, அந்த காலகட்டத்தில் வில்லன் நடிகர்களுக்கு சமமாக இருந்து பட்டையை கிளப்பியவர் நடிகர் செந்தாமரை. நம்பியார், மேஜர் சுந்தரராஜன் ஆகியோர்களுக்கு பிறகு வில்லத்தனத்திலும் குணச்சித்திர நடிப்பிலும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் செந்தாமரை.

    இவரது கம்பீரமான தோற்றத்திற்கும் குரலுக்கும் பல பட வாய்ப்புகள் கிடைத்தன. இன்று அவரை பற்றி ஒரு குட்டி ரவுண்டப்பை பார்க்கலாம்.

     சென்னைக்கு வந்தார்

    சென்னைக்கு வந்தார்

    காஞ்சிபுரம் அருகே தியாகமுகச்சேரி என்ற கிராமத்தில் 1935 அன்று பிறந்தவர் செந்தாமரை. ஏழு வயதில் தந்தையை இழந்து, சித்தப்பாவின் அரவணைப்பில் வளர்ந்தவர். அறிஞர் அண்ணாவின் எதிர் வீடு என்பதால், அவருடைய அறிமுகமும் கரிசனமும் இவருக்கு சுலபமாகவே கிடைத்தது. அண்ணாவின் பரிந்துரையுடன் சென்னைக்கு வந்தார் செந்தாமரை.

     இரண்டில் ஒன்று

    இரண்டில் ஒன்று

    நாடகங்களில் நடிக்க பயிற்சி எடுத்துக்கொண்டு சினிமாவில் நுழைந்தவர், இந்த கம்பீரக்குரலுக்கு சொந்தக்காரர். தந்தை மகனுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாக வைத்து ‘இரண்டில் ஒன்று‘ என்ற நாடகத்தை அரங்கேற்றினார். அந்த நாடகம் நல்ல வரவேற்பை பெற்று 300 காட்சிகளில் நாயகனாக நடித்து அனைவரையும் மிரள வைத்தார்.

     விட்டுக்கொடுத்தார்

    விட்டுக்கொடுத்தார்

    எம்.ஜி.ஆர் நாடக மன்றத்திலும் பின்னர் சிவாஜி நாடக மன்றத்திலும் புகழ் பெற்ற நடிகராக வளர்ந்து உயர்ந்து நின்றார் செந்தாமரை. மேலும் நட்பு ரீதியாக ‘இரண்டில் ஒன்று‘ நாடகத்தின் கதை உரிமையை சிவாஜிக்கு விட்டு கொடுத்தார். அந்த கதையில சில மாற்றங்களை செய்து ‘தங்கப்பதக்கம்' என்ற பெயரில் நாடமாக எடுத்து, நடை உடை, பாவனைகளை தனது பாணியில் கொண்டு வந்து காட்டி பலரின் கைத்தட்டல்களை பெற்றார் சிவாஜி.

     நிச்சயம் ஒரு கதாபாத்திரம்

    நிச்சயம் ஒரு கதாபாத்திரம்

    சென்னையில் பல சபாக்களில் இந்த நாடகம் பல வரவேற்பை பெற்றன. தங்கப்பதக்கம் நாடகத்தின் வெற்றிக்குப்பிறகு, இதை திரைப்படமாக்க எண்ணிய சிவாஜி,இத்திரைப்படத்தை தனது சொந்த செலவில் தயாரித்தார்.படம் பிரம்மாண்ட வெற்றிப்பெற்று சிவாஜியின் புகழை மேலும், உயர்த்தியது. இந்த படத்தின் வெற்றிக்குப்பிறகு சிவாஜியின் பல படங்களில் செந்தாமரைக்கு நிச்சயம் ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது.

     மாஸ் வில்லன்

    மாஸ் வில்லன்

    இதையடுத்து, பல படங்களில், பற்பல வேடங்களில் நடித்து, தன் திறமையினாலே தனக்கென்று தனியிடத்தை வந்தடைந்த மாபெரும் ஆளுமை செந்தாமரை. 1970-களின் இறுதி வரைக்கும், தனக்குக் கிட்டிய எந்த வேடமானாலும் அவற்றில் திறம்பட நடித்து மாஸ் வில்லன் என்ற பெயரை எடுத்தார்.

     ரஜினிக்கு டஃப்

    ரஜினிக்கு டஃப்

    80களில் ரஜினிக்கு சரியான டஃப் கொடுக்கும் வில்லன் யார் என்றால் அது செந்தாமரை தான். கழுகு, தனிக்காட்டு ராஜா, அடுத்த வாரிசு, நான் மகான் அல்ல, உன் கண்ணில் நீர் வழிந்தால், படிக்காதவன், நான் அடிமை இல்லை அனைத்து படங்களில் இவரின் பங்கு பெரிதாக பேசப்பட்டது. மேலும் பணக்காரன் படத்தில் படம் முழுக்க விக்கலுடன் நடித்து நடிப்பின் அடுத்த நிலையினை மெய்ப்பித்து இருப்பார்.

     தனி திறமை

    தனி திறமை

    மிக அழகான பெயருக்கு சொந்தக்காரரான செந்தாமரை, கம்பீரமான நடிகர், முகம், பார்வை குரல் என அனைத்திலும் நடிக்கத் தெரிவந்தவர். வில்லன் வேடத்தில் சின்னச் சின்ன வித்தியாசங்களை ஒவ்வொரு படத்திற்கும் செய்து காட்டுவது இவரது தனித்தன்மை. தனது திறமையால் தனக்கென்று ஒரு தனி இடத்தை வைத்துக்கொண்டு ஆளுமை செய்தவர் செந்தாமரை. தனக்கு கிடைத்த எந்த வேடமானாலும் அவற்றில் திறம்பட நடித்து மக்களின் மனங்களை கவர்ந்தார். பரபரப்பாக நடித்துக்கொண்டு படு பீக்கில் இருக்கும் போதே, தனது 57 வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார். குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாப்பாத்திரங்களில் தனக்கென்று ஒரு தனி முத்திரையை ஏற்படுத்தி மிளிர்ந்த, இவரை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது. பல படங்கள் இன்றும் இவர் புகழ் பேசும்.

      English summary
      Villain Senthamarai special roundup
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X