»   »  காதல் ரோஜாவை ‘மைக்’ ஆக்கி டூயட் பாடும் மாப்ள சிங்கமும், வக்கீல் காதலியும்!

காதல் ரோஜாவை ‘மைக்’ ஆக்கி டூயட் பாடும் மாப்ள சிங்கமும், வக்கீல் காதலியும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விமல் - அஞ்சலி ஜோடி மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ள படம் மாப்ள சிங்கம். இந்தப் படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் பி லிட் பட நிறுவனம் சார்பில் பி.மதன் தயாரிக்கிறார். கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநர் ராஜசேகர்.

மாப்ள சிங்கம் படத்தில் நகைச்சுவை வேடத்தில் சூரி நடிக்கிறார். ராதாரவி, மனோபாலா, மயில்சாமி, 'முனீஸ்காந்த்' ராம்தாஸ், காளி வெங்கட், சிங்கமுத்து, சுவாமிநாதன், விஷ்ணு, மதுமிலா ஆகியோர் நடிக்கின்றனர்.


இவர்களுடன், ஏ.ஆர்.ரஹ்மானின் கே.எம். மியூஸிக் ஸ்கூலின் வைஸ் பிரின்ஸிபால் ஆடம் க்ரீக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ரகுநந்தன் இசையமைக்கிறார். டான் அசோக் வசனகர்த்தாவாக அறிமுகமாகிறார்.


[மாப்ள சிங்கம் படங்கள்]


வாகை சூடும்...

வாகை சூடும்...

ஏற்கனவே, விமல் -அஞ்சலி ஜோடி இணைந்து நடித்த தூங்கா நகரம் மற்றும் கலகலப்பு இரண்டுமே வெற்றி பெற்றதால், மீண்டும் இந்த கூட்டணி வெற்றிவாகை சூடும் என எதிர்பார்க்கப் படுகிறது.


கற்றது தமிழ்...

கற்றது தமிழ்...

இப்படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் அஞ்சலி நடிக்கிறார். இதற்காக தூய தமிழ் பேசக் கற்றுக் கொண்டுள்ளாராம் அஞ்சலி.


தாவணி கட்டிய ரோஜா...

தாவணி கட்டிய ரோஜா...

தற்போது இப்படத்தின் சில ஸ்டில்கள் வெளியாகியுள்ளது. அவற்றில் தாவணி கட்டிய ரோஜாவாக அஞ்சலியும், முருக்கு மீசையுடன் விமலும் உள்ளார்.


காதல் ரோஜா...

காதல் ரோஜா...

இருவர் கையிலும் சிவப்பு நிற ரோஜாக்கள் உள்ளது. அதை வைத்து இருவரும் காதலைச் சொல்வார்கள் என எதிர்பார்த்தால், மோகன் ஸ்டைலில் மைக்காக்கி பாடுகிறார்கள்.


அழகோ அழகு...

அழகோ அழகு...

இந்தப் பட ஸ்டில்களைப் பார்க்கும் போது அஞ்சலி முன்னை விட உடல் மெலிந்து மிகவும் அழகாக தோற்றமளிக்கிறார்.


English summary
Actors Vimal and Anjali, who had earlier worked together in Tamil films "Thoonga Nagaram" and "Kalakalappu", have teamed up for the third time for another film "Mappillai Singam" in the same language.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil