»   »  "புஷ்பா புருஷனை"க் கழற்றி விட்டு "ரைம்ஸ்" சங்கருடன் கூட்டணி அமைத்த விமல்!

"புஷ்பா புருஷனை"க் கழற்றி விட்டு "ரைம்ஸ்" சங்கருடன் கூட்டணி அமைத்த விமல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விமல் நடிக்கும் மன்னர் வகையறா படத்தில் ரோபோ சங்கர் காமெடியனாக ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இது நம்ம ஆளு, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படங்களின் காமெடி ஹிட்டானதால் சூரி மிகுந்த சந்தோஷத்துடன் வலம்வருகிறார்.

இந்நிலையில் களவாணி தொடங்கி மாப்ள சிங்கம் வரை தன்னுடைய படங்களில் காமெடி செய்துவந்த சூரியைக் கழட்டிவிட்டு, ரோபோ சங்கருடன் விமல் புது கூட்டணி அமைத்திருக்கிறார்.

விமல்-சூரி

விமல்-சூரி

சினிமாவில் வாய்ப்புத் தேடிய காலத்திலிருந்தே விமலும்,சூரியும் நண்பர்கள். நட்பை நிரூபிப்பது போல களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, மாட்டுத்தாவணி, மாப்ள சிங்கம் போன்ற படங்களில் இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். இதில் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் கிட்டத்தட்ட படத்தின் 2 வது ஹீரோவாகவே சூரி நடித்திருந்தார்.

மாப்ள சிங்கம்

மாப்ள சிங்கம்

மாப்ள சிங்கம் படத்தில் சூரியின் காட்சிகளைக் குறைக்க வேண்டும் என்று விமல் கூறியதால், சூரி விமல் நட்பில் விரிசல் விழுந்ததாக தகவல்கள் வெளியாகின. அதனை நிரூபிப்பது போல விமல் தற்போது நடிக்கும் மன்னர் வகையறா படத்தில் சூரிக்குப் பதில் ரோபோ சங்கருடன், விமல் கூட்டணி அமைத்திருக்கிறார்.

ரோபோ சங்கர்

ரோபோ சங்கர்

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் ரோபோ சங்கரின் காமெடிக் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக ரோபோ சங்கரின் 10 வயது பாலகன் நடிப்புக்கு தியேட்டரே குலுங்குகிறது. இதனால் ரோபோ சங்கர் உற்சாகத்துடன் அடுத்தடுத்த படங்களைத் தேர்வு செய்து வருகிறார்.

மன்னர் வகையறா

மன்னர் வகையறா

இந்நிலையில் பூபதி பாண்டியன் இயக்கும் மன்னர் வகையறா படத்தில் ரோபோ சங்கருக்கு தனி காமெடியனாக புரமோஷன் கிடைத்திருக்கிறது. விமல்- ஆனந்தியுடன் இணைந்து நாசர், பிரபு, சரண்யா பொன்வண்ணன் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் 20 ம் தேதி தொடங்குகிறது. முழுக்க காமெடியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் விமலும் ஒரு தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Vimal Team Up with Robo Shankar for His Upcoming Movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil