Don't Miss!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சேர்ந்து போலாமா? ஓபனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு!
"பன் பட்டர் ஜாமுங்கோ... சென்ட்ரல்ல போகுங்கோ... ஐ பி எல் மேச்சுங்கோ... சிக்ஸ் அடிச்சா கேச்சுங்கோ" என்ற தத்துவப் பாடல் இடம்பெற்றுள்ள படம் சேர்ந்து போலாமா.
காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட் போல செட் போட்டு படம் பிடித்துள்ளனர். இந்தப் படம் எஸ்கேப், ஐ நாக்ஸ் எல்லாம் ஹிட் ஆகும் சேர்ந்து போலாமா? என்று கேட்கிறார் நாயகி.

படத்தின் பாடலில் கதையை சொல்லியாகிவிட்டது அப்புறம் என்ன என்று கேட்கிறீர்களா? படம் முழுக்க முழுக்க நியூசிலாந்தில் எடுக்கப்பட்டது என்பதுதான் விசேசம்.
ஐஸ்வர்யா எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம், ‘சேர்ந்து போலாமா.' வினய்-மதுரிமா ஜோடியாக நடித்த இந்த படத்தில் தம்பி ராமய்யா, தலைவாசல் விஜய், தெலுங்கு நடிகர் நந்து, புதுமுகங்கள் அருண், சசி, ப்ரீதிபால் ஆகியோரும் நடித்துள்ளனர். அனில்குமார் இயக்கியுள்ளார்.

இந்தப் படம் ஒரு பயணத்தில் ஏற்படும் காதல் கதையாம். நியூசிலாந்தில் இருந்து ஆக்லாந்துக்கு பயணமாகும் ஒரு இளைஞனையும், பெண்ணையும் பற்றிய கதை.
இரண்டு பேருக்கும் இடையே ஏற்படும் காதலையும், இவர்களின் பயணத்தின்போது நிகழும் ஒரு கொலையையும் சுற்றி கதை பின்னப்பட்டு இருக்கிறது.
படப்பிடிப்பு முழுவதும் நியூசிலாந்தில் நடந்துள்ளது. சஞ்சய் சங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஷ்ணு மோகன் இசையமைத்து இருக்கிறார். கதை-வசனத்தை ரவி மேத்யூ, ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் எழுதியுள்ளனர். சசி நம்பீசன் தயாரித்து இருக்கிறார்.
சில்க் பட இயக்குனர்..
இப்படத்தை அனில்குமார் இயக்குகிறார். இவர் ஊர்வசியின் சகோதரி கல்பனாவின் முன்னாள் கணவர். இவர் மலையாளத்தில் மம்முட்டி, சுரேஷ்கோபி, ஜெயராம் போன்றோரை வைத்து பல படங்கள் இயக்கியுள்ளார். சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கையை கிளைமாக்ஸ் என்ற பெயரில் படமாக எடுத்துள்ளார். சேர்ந்து போலாமா படம் பற்றி அவர் சொல்வதை மேற்கொண்டு படியுங்களேன்.

கொலையும் பிரிவும்
நியூசிலாந்தில் வாழும் தமிழர்களையும் அவர்களின் உறவுகளையும், உணர்வுகளையும் யதார்த்தமாக பதிவு செய்யும் படமாம். கொலையால், நண்பர்களுக்கு வரும் பிரிவு, பகையை சொல்கிறது இந்த படம்
நட்பும் காதலும்
அந்நாட்டின் தெற்கு தீவில் பால்யகால நண்பர்களாக வசித்த ஏழுபேர் கால ஓட்டத்தில் பிரிந்து போகிறார்கள். ஒரு கட்டத்தில் பிரிந்த நட்பை தேடி புறப்படுகின்றனர். இடையில் ஒரு இக்கட்டில் சிக்கி கொள்கிறார்கள். ஆபத்தை கடந்து அவர்கள் நட்பு வென்றதா? அவர்களில் சிலருக்குள் துளிர்விட்ட காதல் வளர்ந்ததா? என்பதுகதை.

நியூசிலாந்தில் படப்பிடிப்பு
நியூசிலாந்து நாட்டில் செட்டில் ஆகிவிட்ட சசிநம்பீசன், இவர் தனது மனைவி ரீட்டா சசியுடன் இணைந்து எடுத்துள்ள படம்தான் சேர்ந்து போலாமா?.நியூசிலாந்தின் பெரிய நகரங்கள், வெலிங்டன் துறைமுகம், லைட்ஹவுஸ் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
ஹீரோ ஹீரோயின் எங்கேப்பா?
இந்தப்படம் எடுக்கப்பட்ட போதே ஹீரோ, ஹீரோயினுக்கும் இயக்குநருக்கும் இடையே செம சண்டையாம். அதனால்தானோ என்னவோ ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு கடைசி வரை ஹீரோ வினய், ஹீரோயின் மதுரிமா, தம்பி ராமையா, தலைவாசல் விஜய் என யாருமே வரவில்லை. கேட்டால் கடைசி நேரத்தில் விழா தேதியை சொன்னார்கள் என்று பதில் சொல்கிறார் வினய்.
வினய்க்கு கை கொடுக்குமா?
இந்தப் படம் அரண்மனை படத்திற்கு முன்பே எடுக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதமே ஆடியோ ரிலீஸ் ஆகிவிட்டது ஆனால் என்ன காரணமே படம் வெளியானதாக தெரியவில்லை.

சூட்டோடு சூட்டாக
வினய் நடித்த அரண்மனை ஹிட் ஆகியுள்ளதால் அந்த சூட்டோடு சூட்டாக சேர்ந்து போலாமா படத்தை ரிலீஸ் செய்ய நினைக்கின்றனர் தயாரிப்பாளர்கள்.
ஓபனிங் நல்லா இருக்கு
சரி நம்ம கதைக்கு வருவோம். இந்தப்படத்தின் பாடல் யு டுயூப்பில் வெளியாகியுள்ளது. அதில் ஒரு சாமியார் சொல்வார், ஓபனிங் நல்லாத்தான் இருக்கு ஆனா பினிசிங் சரியில்லையே என்று. அது போல ஆகிவிட்டதோ ‘சேர்ந்து போலாமா' படம்.