வினய்க்கும் விமலா ராமனுக்கும் விரைவில் டும் டும் டும்.. டேட்டிங்கா போய் போரடிச்சுடுச்சாம்!
சென்னை: நடிகர் வினய் மற்றும் நடிகை விமலா ராமன் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சூப்பரான தகவல் கசிந்துள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு வெளியான உன்னாலே உன்னாலே திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் வினய்.
இயக்குநர் பாலசந்தர் இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளியான பொய் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விமலா ராமன். இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார்களாம்.

ஹீரோ டு வில்லன்
இயக்குநர் ஜீவா இயக்கத்தில் வெளியான உன்னாலே உன்னாலே திரைப்படத்தில் செம ஹேண்ட்ஸம் ஆன ஹீரோவாக அறிமுகமான நடிகர் வினய், ஹீரோயிசம் செட்டாகாத நிலையில், மிஷ்கினின் துப்பறிவாளன், சிவகார்த்திகேயனின் டாக்டர், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் என அதிரடியாக வில்லன் அவதாரத்துக்கு மாறி விட்டார்.

42 வயசு
உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், மோதி விளையாடு, என்றென்றும் புன்னகை, ஒன்பதுல குரு, அரண்மனை, ஆயிரத்தில் இருவர் என நடித்து வந்த நடிகர் வினய்க்கு தற்போது 42 வயதாகிறது. கடந்த பல ஆண்டுகளாக பிரபல நடிகை ஒருவரை காதலித்து வந்த நிலையில், ஒரு வழியாக திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வினய் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராமன் தேடிய சீதை
தமிழில் பொய் படத்தில் அறிமுகமான ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த விமலா ராமன் மலையாளத்தில் செம பிசியான நடிகையாக மாறி பல படங்களில் நடித்துள்ளார். 2008ம் ஆண்டு இயக்குநர் சேரனின் ராமன் தேடிய சீதை படத்தில் ஹீரோயினாக நடித்த விமலா ராமன் மீண்டும் தெலுங்கு, மலையாளம் பக்கம் கவனம் செலுத்தினார். வினய் மற்றும் விமலா ராமன் இணைந்து டேம் 999 எனும் படத்தில் நடித்து இருந்தனர்.

ஒரே டேட்டிங்
42 வயசு வினய் மற்றும் 40 வயசு விமலா ராமன் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த இருவரும் பல ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்தனர். மாலத்தீவு உள்ளிட்ட இடங்களுக்கு அடிக்கடி டேட்டிங் செய்து வந்த இவர்களின் புகைப்படங்கள் டிரெண்டான நிலையில், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விரைவில் திருமணம்
தென்னிந்தியாவின் முன்னணி நட்சத்திர ஜோடியான இவர்கள் கூடிய விரைவிலேயே திருமண தேதியை அறிவிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த மே மாதம் இருவரும் திருமணம் செய்து கொள்ள அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வினய் மற்றும் விமலா ராமன் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருவரும் பிசி
டாக்டர், எதற்கும் துணிந்தவன் படங்களில் தொடர்ந்து வில்லனாக மிரட்டி வந்த நடிகர் வினய் அடுத்ததாக சூர்யா தயாரிப்பில் அருண் விஜய் நடித்து வரும் ஓ மை டாக் படத்திலும் நடித்து வருகிறார். சோனியா அகர்வால் நடித்து வரும் கிராண்ட்மா படத்தில் விமலா ராமன் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் கிராண்ட்மா உருவாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











