»   »  வரலட்சுமியின் 'அம்மாயி'க்கு முதல் ஆளாக வாழ்த்துக் கூறிய விஷால்!

வரலட்சுமியின் 'அம்மாயி'க்கு முதல் ஆளாக வாழ்த்துக் கூறிய விஷால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வினய்-வரலட்சுமி நடிக்கும் அம்மாயி படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.

தாரை தப்பட்டை படத்தில் சூறாவளியாகக் கலக்கிய வரலட்சுமி தற்போது மெகா ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து, மலையாளப் படமொன்றில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் வினய்யுடன் இணைந்து வரலட்சுமி நடிக்கும் அம்மாயி படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியிருக்கிறது.அறிமுக இயக்குநர் ஜி.சங்கர் இயக்கும் இப்படத்துக்கு 'இசைஞானி' இளையராஜா இசையமைக்கிறார். இதுகுறித்து படத்தின் இயக்குநர் சங்கர் ''இது ஒரு உண்மைக் கதையின் தழுவல்.


பெரும்பாலான படப்பிடிப்பை சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். 4 மாதங்களில் இப்படத்தின் மொத்தப் படப்பிடிப்பையும் முடித்து விடுவோம்.


இசைஞானி இளையராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார்'' என்று கூறியிருக்கிறார். வினய் திருமணமானவராக நடிக்கும் இப்படம் திகில் பின்னணியில் உருவாகிறது.


Vinay-Varalakshmi Ammayi Pooja Today

வழக்கம்போல நடிகர் விஷால் முதல் ஆளாக இப்படத்தின் ஹீரோயின் வரலட்சுமிக்கு தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவிக்க, பதிலுக்கு வரலட்சுமி நன்றி மிஸ்டர்.மருது என்று கூறியிருக்கிறார்.


English summary
Vinay-Varalakshmi Starrer Ammayi Pooja Pooja Held Today.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos