»   »  மகேந்திரன் – மனீஷாஜித் நடிக்கும் காமெடி கலக்கல் படம் விந்தை!

மகேந்திரன் – மனீஷாஜித் நடிக்கும் காமெடி கலக்கல் படம் விந்தை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மகேந்திரன் - மனீஷா ஜித் இருவரும் இணைந்து நடிக்கும் காமெடிப் படம் விந்தை. இந்தப் படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடந்தது.

அன்னை புதுமை மாதா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக ஆர் எல் யேசுதாஸ், ஆர் ஒய் ஆல்வின், கெவின் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

லாரா

லாரா

வில்லியம்ஸ் இசையமைக்கிறார். ரத்தீஷ் கண்ணா ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் லாரா. இவர் ஏற்கெனவே வர்மம் என்ற படத்தை இயக்கியவர்.

நட்சத்திரங்கள்

நட்சத்திரங்கள்

இந்தப்படத்தில் மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், மகாநதி சங்கர், காதல் சரவணன், முத்துக்காளை, சிசர்மனோகர், டெலிபோன் ராஜ், நெல்லைசிவா, டி.ரவி, கவுதமி, செந்தி ஜெகநாதன், ஐசக், ஆதேஷ், சிவநாராயணமூர்த்தி, சுமதி, தவசி, சுப்புராஜ் நடிக்கிறார்கள்.

காமெடி

காமெடி

படம் பற்றி இயக்குனர் லாராவிடம் கேட்டபோது, "இந்த படம் முழுக்க முழுக்க காமெடியாக உருவாக்கப் பட்டுள்ளது. மனித வாழ்கையில் தொலைந்து போன ஒரு விஷயத்தை தேடி போகிற இடமாக காவல் நிலையம் இருக்கிறது.

சிரிப்பைத் தொலைக்கும் இடம்

சிரிப்பைத் தொலைக்கும் இடம்

அப்படி இருக்கும் காவல் நிலையத்தை அனைவரும் ஒரு வித வெறுப்புடனும், அருவருப்புடனும் தான் பார்பார்கள். அந்த இடத்திற்கு சென்றுவிட்டால் நாம் அனைவரும் சிரிப்பை மறந்துவிடுவோம். ஆனால் இதில் ஊரில் இருந்து ஓடி வந்த நாயகன், நாயகி இருவரும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார்கள் இரவு 1 மணி முதல் மறுநாள் இரவு 1 மணிவரை அவர்கள் சந்திக்கும் நிகழ்வுகள் தான் காமெடி தான் இந்த படத்தின் திரைக்கதை.

காவல் நிலையத்தில் காமெடி

காவல் நிலையத்தில் காமெடி

படம் வெளியான பிறகு ரசிகர்கள் இது போன்று ஒரு காவல் நிலையம் நம்ம ஊரில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசிப்பார்கள். அந்த அளவிற்கு காமெடி காவல் நிலையமாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம்.

காவல் நிலையத்திலேயே...

காவல் நிலையத்திலேயே...

ஒரு சில காட்சிகளை தவிர மற்ற அணைத்து காட்சிகளும் காவல் நிலையத்திலேயே படமாக்கப்பட்டது. படத்தின் அணைத்து கட்ட வேலைகளும் முடிந்து விட்டது படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்றார் இயக்குனர்.

English summary
Vindhai is a comedy movie directed by Laara which expected in screens soon
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil