»   »  வித்தையடி நானுனக்கு... இது ஒரு சைக்கோ த்ரில்லர்... 2 கேரக்டர்கள் மட்டுமே!

வித்தையடி நானுனக்கு... இது ஒரு சைக்கோ த்ரில்லர்... 2 கேரக்டர்கள் மட்டுமே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வித்தையடி நானுனக்கு! ஒரு நவீன திரில்லர். நாம் ரசித்துக் குடிக்கும் காபி, அக்னிக் கனல் போல நம் நாவையே எரித்தால் எப்படி இருக்கும். அப்படி விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையில் நடக்கும் நெருப்பான போராட்டம்தான் வித்தையடி நானுனக்கு.

Vindhaiyadi Naanukku Movie

தன் வழி தனி வழி அதுதான் ஒரே வழி. இதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் போகக்கூடிய நேரெதிர் துருவங்கள் (Noir characters). அவர்களின் காதலும், மோதலும் தான் வித்தையடி நானுனக்கு.

Vindhaiyadi Naanukku Movie

ஒரே காட்சியில் ஒரே சூழ்நிலைக்கு அதில் உள்ள கதாபாத்திரங்கள் விதம்விதமான மனோபாவங்களை வெளிப்படுத்துவார்கள் . அந்த உணர்வுக் குவியல்களை தனது (Stroop effect) இசையால் திகிலும் தீஞ்சுவையும் கலந்து நமக்குள் ஊடுருவுகிறார் இசையமைப்பாளர் விவேக் நாராயண்.

அமெரிக்காவில் வசிக்கும் சௌரா சையத் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஆழ்மனத் துடிப்பை எகிற வைத்து, திரையை சூடாக்கும் அனலடிக்கும் காட்சிகளுடன் ராம்நாதன் கே.பி எழுதி இயக்கியுள்ளார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் வித்தையடி நானுக்கு திரைப்படம் எல் 9 மற்றும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனங்களின் பெருமை மிகு கூட்டுத் தயாரிப்பு.

Vindhaiyadi Naanukku Movie

ராமநாதன் கேபி இயக்கத்தில், எல் 9 மற்றும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் தயாரிக்கும் புதிய படம் 'வித்தையடி நானுனக்கு'.

இது ஒரு சைக்கோ த்ரில்லர் படமாகும்.

சில ஆண்டுகளுக்கு முன் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஸ்ரீ என்ற படம் நினைவிருக்கிறதா.. அந்தப் படத்தில் இடம்பெற்ற 'வசந்த சேனா வசந்த சேனா...' பாடல் மிகப் பிரபலம். அந்தப் படத்திற்கு டிஎஸ் முரளிதரன் என்ற பெயரில் இசையமைத்தவர்தான் இப்போது ராமநாதன் கேபி என பெயர் மாற்றிக் கொண்டு இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

அதுமட்டுமல்ல, படத்தின் இரு கதாப்பாத்திரங்களில் ஒருவர் இவர்தான். இவருக்கு ஜோடியாக சவுரா சையத் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.

விவேக் நாராயண் இசையமைக்கிறார். ராஜேஷ் கடம்கோட் ஒளிப்பதிவு செய்கிறார்.

Vindhaiyadi Naanukku Movie

எல் 9 மற்றும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் பேனரில் லோகநாதன் D - ஐஎஸ்ஆர் செல்வகுமார் தயாரிக்கின்றனர்.

படத்தில் ஒரேயொரு பாடல்தான். அதுவும் மகாகவி பாரதியின் 'பாயும் ஒளி நீ எனக்கு' எனத் தொடங்கும் அற்புதமான பாடல். இதற்கு மேற்கத்திய பாணியில் மெட்டமைத்துள்ளாராம் விவேக் நாராயண்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கொடைக்கானலில் படமாக்கப்பட்டுள்ளது.

English summary
Vindhaiyadi Naanukku is a Psycho Thriller Movie. In this movie including Two Characters only.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil