»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

விபச்சாரம் செய்ததாக பிடிபட்ட வழக்கில் நடிகை வினிதா, அவரது தாயார், சகோதரர் ஆகியோர் சென்னை நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

விபச்சாரம் செய்ததாக நடிகை வினிதா, அவரது தாயார், சகோதரர் உள்ளிட்ட 7 பேர் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது சென்னை எழும்பூர் 10-வது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இவர்களில் 3 பேர் அபராதம் கட்டி விட்டு விடுதலையாகினர்.

இந்த நிலையில் மற்றவர்கள் மீது வழக்கு நடந்து வருகிறது. இவர்கள் அனைவருக்கும் நேற்று நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்படுவதாக இருந்தது. இதற்காக வினிதா உள்ளிட்டவர்கள் நீதிமன்றம் வந்திருந்தனர். ஆனால் ஷீமா என்பவர் மட்டும் வரவில்லை.

அவர் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது. இதையடுத்து வருகிற 20ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்த நீதிபதி பூதநாதன், அன்று அனைவரும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

நீதிமன்றத்திற்கு வந்திருந்த நடிகை வினிதா தெளிவான முகத்துடன், எந்தவித குழப்பமும் இல்லாமல் காணப்பட்டார். பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுப்பதையும் அவர் தடுக்கவில்லை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil