»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil
நீதிமன்ற வளாகத்தில் போலீஸாரைத் தாக்கியதாக விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகைவினிதாவின் வழக்கறிஞர்கள் நான்கு பேர் மீது சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கைது செய்துள்ளனர்.

விபச்சாரத்தில் ஈடுபட்ட வினிதா, அவரது தாயார், தம்பி, கார் டிரைவர், இரு பெண்கள், உல்லாசமாக இருந்கவந்தவர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தனர்.


நீதிமன்றம் கொண்டு வரப்பட்ட வினிதா
அப்போது, அங்கு கூட்டம் அலை மோதியது. முகத்தை துண்டால் மூடிக் கொண்டு வினிதா வந்தார். அவருக்குத்துணையாக வழக்கறிஞர்களும் வந்தனர்.

அப்போது போலீஸாருக்கும் வினிதாவின் வழக்கறிஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒருசப்-இன்ஸ்பெக்டர் தாக்கப்பட்டார். அவரது வாய் உடைந்து ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

இதையடுத்து வினிதாவின் வழக்கறிஞர்கள் அருள்சாமி, கெளதம், கருப்பசாமி மற்றும் முரளிதரன் ஆகியோர்இன்று கைது செய்யப்பட்டனர்.

வினிதா வாக்குமூலம்:

இதற்கிடையே சமீப காலமாக சினிமா சான்ஸ் குறைந்து போனதால், சுகமான வாழ்க்கை வாழவே விபச்சாரத்தில்ஈடுபட்டதாக போலீசாரிடம் வினிதா தெரிவித்துள்ளார்.


வினிதா, அவரது தாயாரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கோகினூர் காண்டம்கள், செல்போன்கள்
தனது சகோதரிக்கு திருமணம் செய்து வைக்க ஏராளமான பணத்தை செலவிட்டுவிட்டதாலும், சினமா சான்ஸ்இல்லாமல் போனதால், போதிய வருமானம் இல்லாமல் தடுமாறியதாலும் தான் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டதாகபோலீசாரிடம் வாக்குமூலம் தந்துள்ளார் வினிதா.மேலும் சினிமாவில் கொடி கட்டிப் பறந்த காலத்தில் முன்னணி தயாரிப்பாளர்கள், நடிகர்கள், டைரக்டர்கள்என்னை தினமும் அனுபவித்தனர்.
இப்போது சான்ஸ் கேட்டால் யாருமே திரும்பிக் கூட பார்க்கவில்லை, உதவவும்இல்லை என்றும் வினிதா கூறியுள்ளார்.
  • நடிகை வினிதா விபச்சார வழக்கில் கைது

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil