»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட வினிதா ஜாமீனில் விடுதலையாகிறார்.

வினிதா, அவரது தாயார் லட்சுமி, தம்பி சங்கர், கார் டிரைவர், மும்பை பெண்களான சீமாகபூர், சுமித்ரா ராவ்,புரோக்கர் அன்வர் ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மயிலாப்பூரில் உள்ள அபலைகள்இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் வழக்கறிஞர்கள்-போலீசார் இடையே மோதல்ஏற்பட்டதால் நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது இவர்கள் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிஅனைவரும் தலா ரூ. 5,000 கட்ட உத்தரவிட்டார். ஆனால், நீதிமன்றம் திங்கள்கிழமை தான் இயங்கும் என்பதால்இன்று தான் அவர்கள் அந்தப் பணத்தைக் கட்டி ஜாமீன் பெற முடியும். இதனால் இன்று (திங்கள்கிழமை) அவர்கள்ஜாமீனில் வெளியே வர உள்ளனர்.

வினிதா வழக்கறிஞர்கள் கைது விவகாரம்:

இதற்கிசையே போலீஸாரைத் தாக்கியதாக நடிகை வினிதாவின் வழக்கறிஞர்கள் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளாதக் கண்டித்து, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டமும்,நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டமும் நடத்தினர்.

வினிதா, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு வரப்பட்டபோது, அவரது வழக்கறிஞர்களுக்கும்,போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வினிதாவின் வழக்கறிஞர்கள் ஒரு சப் இன்ஸ்பெக்டரைகடுமையாக தாக்கினர்.

இதைத் தொடர்ந்து வினிதாவின் வழக்கறிஞர்கள் கருப்பசாமி, கெளதம், முரளிதரன் உள்ளிட் 4 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.

இதைக் கண்டித்து இன்று வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

போலீஸார் இதுபோல தொடர்ந்து அராஜகமாக நடந்து கொண்டால் மாநலம் தழுவிய போராட்டம் நடத்தவேண்டியதிருக்கும் என் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பிரபாகரன் எச்சரித்துள்ளார்.

  • விபச்சாரம்: வினிதாவின் வாக்குமூலம்
  • நடிகை வினிதா விபச்சார வழக்கில் கைது

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil