»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோலிவுட் நியூமராலஜி ஜோசியர்களுக்கு இப்போது நல்ல நேரம் போலிருக்கிறது. கலைத் துறையைச் சேர்ந்தவர்கள் வரிசை கட்டி பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இயக்குனர் டி.ராஜேந்தர் தனது பெயரை விஜய டி.ராஜேந்தர் என்று மாற்றினார். இருந்தாலும் மாற்றியதற்கு முன்பிருந்த நிலைதான் பின்பும் நிலவுகிறது. பெயரை அவர் மாற்றிக் கொண்டாலும், ராசி ஒர்க்அவுட் ஆனதென்னவோ அவரது மகன் சிம்புவுக்குத்தான்.

விஜய டி.ராஜேந்தர் ஆக ராஜேந்தர் மாறியவுடன் வெளியான சிம்புவின் மன்மதன் படு ஓட்டம் ஓடி சிம்புவை தூக்கி நிறுத்தியது.

இதேபோல ரப்பர் வாயன் என்று கவுண்டமணியால் செல்லமாக கூப்பிடப்படும் சின்னி ஜெயந்த்தும் தனது பெயரை சின்னி ஜெயந்தர் என்று மாற்றிக் கொண்டுள்ளார்.

பெயரை மாற்றினால் எதிர்காலம் படு பிரைட்டாக இருக்கும் என்று ஒரு நேமாலஜி பார்ட்டி கிளப்பி விட்டதால், ஜெயந்தர் ஆகி விட்டார் ஜெயந்த்.

அதே போல சந்திரசேகரும் வாகை சந்திரசேகரானார்.

இந்த வரிசையில் இப்போது வினோதினியும் தனது பெயரை மாற்றிக் கொண்டு விட்டார். சித்திரைப் பூக்கள் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால், இவரை அடையாளம் காட்டியது பிரசாந்துக்கு ஜோடியாக நடித்த வண்ண வண்ணப் பூக்கள் படம் தான்.

சினிமாவில் ன்ன ரவுண்டு தான் வந்தார். சினிமா கைவிட்டாலும் டிவி அவருக்கு கை கொடுத்தது. இப்படிக்குத் தென்றல், ஆனந்த பவன், உடல் பொருள் ஆனந்தி, சக்தி, குடும்பம், சித்தி என ஏராளமான தொடர்களில் வினோதினி நடித்து வருகிறார்.

தொடர்ந்து டிவி சீரியல்களிலேயே அதிக கவனம் செலுத்துகிறார்.

ஆனாலும் அவருக்குள் சினிமா தாகம் இன்னும் நீங்கவில்லை. இதனால் பெயரை மாற்றிப் பார்த்தால் ஏதாவது வாய்ப்பு கிடைக்கலாம் என்ற நப்பாசையில் தனது பெயரை க்யாதி என்று மாற்றிக் கொண்டுள்ளார்.

இவரது ஒரிஜினல் பெயர் லட்சுமி தாகா. அதை சினிமாவுக்காக வினோதியாக மாற்றினார். இப்போது அதே சினிமாவுக்காக மீண்டும் பெயரை மாற்றி க்யாதி ஆகிவிட்டார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil