twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    போலீஸ் அதிகாரியாக வாழ்க்கையைத் துவங்கி சினிமாவில் முத்திரை பதித்த வினுசக்கரவர்த்தி

    By Karthikeyan
    |

    சென்னை: நடிகர் வினு சக்கரவர்த்தி உடல் நலக் குறைவால் சென்னையில் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 72.

    1945 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்தவர் வினுசக்கரவர்த்தி. சென்னை பள்ளிப்படிப்பையும், கல்லூரி படிப்பையும் முடித்தார். படிப்பை முடித்ததும் காவல்துறையில் பணியில் சேர்ந்தார். பின்னர் தெற்கு ரயில்வேயில் 4 ஆண்டுகள் பணிபுரிந்தார். கல்லூரி பருவத்தில் நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்த இவர், நாடகம் எழுதி நடித்துள்ளார்.

    vinu chakravarthy biography

    பின்னர் கன்னட இயக்குநர் புட்டண்ணா கனகலிடம் கதாசிரியாராக சினிமா வாழ்க்கையை துவங்கினார். அவருடன் இணைந்து பணியாற்றிய 'பரசக்கே கண்ட தின்மா' என்ற படம் வெற்றிபெற்றது. அதுதான் பின்பு 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி' என்ற தலைப்பில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.

    இவர் கதை எழுதிய 'வண்டிச்சக்கரம்' படத்தில் சிலுக்கு என்ற கதாபாத்திரத்தில் ஸ்மிதாவை சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அதுவே நாளடைவில் 'சில்க ஸ்மிதா' என்ற அடைமொழியாக பெயர் பெயரக் காரணமாக அமைந்தது.

    தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் வினுசக்கரவர்த்தி. இவர் நடிப்பில் வெளியான 'குருசிஷ்யன்', 'அண்ணாமலை', 'அருணாசலம்', 'நாட்டாமை', 'மாப்பிளை கவுண்டர்', 'அமர்க்களம்', 'நினைத்தேன் வந்தாய்', 'சுந்தரா டிராவல்ஸ்', போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.

    வினு சக்கரவர்த்தி நடித்த முதல் படம் 'கரும்பு வில்', 500வது படம் 'சின்னத்தாயி'. 2007ல் வெளிவந்த முனி திரைப்படம் அவரின் ஆயிரமாவது படமாகும். இறுதியாக 2014ல் வெளிவந்த 'வாயை மூடி பேசவும்' படத்தில் நடித்திருந்தார் வினுசக்கரவர்த்தி.

    தன்னுடைய குணசித்திர நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பெற்றிருந்த வினுசக்கரவர்த்தி கடந்த 3 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு காலமானார். அவரின் இழப்பு தமிழ் திரையுலகிற்கு ஈடு இணை செய்யமுடியாததாகும்.

    English summary
    Actor vinu chakravarthy biography
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X