»   »  விஐபி 2... ஒரு சினிமா ரசிகனின் பார்வையில்....

விஐபி 2... ஒரு சினிமா ரசிகனின் பார்வையில்....

Posted By:
Subscribe to Oneindia Tamil

முன்னாடியெல்லாம் டிவில பேப்பர்லதான் படத்துக்கு விளம்பாம் பண்ணுவாங்க. இப்பல்லாம் படம் ரிலீஸாகுறதுக்கு ரெண்டு மூணு நாளுக்கு முன்னால எஸ்எம்எஸ்லயே விளம்பரம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அதுவும் இந்தப் படத்துக்கு ஒண்ணு அனுப்பிருந்தாங்க பாருங்க.. 'The Jobless Raguvaran is Back' ன்னு.. ஏன்யா ஒருத்தனுக்கு வேலை போயிருச்சிங்குறதுல உனக்கு அவ்வளவு சந்தோசமா? சரி வாங்க நம்ம படம் எப்டி இருக்குன்னு பாப்போம்.

தனுஷ் நடிச்ச 30 படங்கள்லயும் ஒரு மிகப்பெரிய வெற்றிப் படம்னா அது வேலையில்லா பட்டதாரின்னு தான் சொல்லCgம். அந்த அளவுக்கு இளைஞர்களை ஈர்த்த படம். அப்படிப்பட்ட ஒரு படத்துக்கு இரண்டாவது பாகம் எடுத்துருக்காங்க. ஆனா முதல் பாகத்தோட வெற்றிக்கு வித்திட்ட ரெண்டு முக்கியான கலைஞர்களான இயக்குநர் வேல்ராஜ், இசையமைப்பாளர் அனிருத் இல்லை. இருந்தாலும் படம் நல்லாதான் வந்திருக்கு.

VIP 2... audience review

மற்ற இரண்டாம் பாகப் படங்கள ஒப்பிடும்போது இந்தப் படத்துல கதைக்கான அந்த செட்டப்புக்குள்ள நம்மள புகுத்திக்கிறதுக்கு நேரமே தேவைப்படல. நேரடியா காட்சிகளோட ஒன்ற முடியுது. ஏன் இத சொல்றேன்னா, சிங்கம் 2 படத்துல முதல் பாகத்துல நடிச்ச ஒவ்வொரு கேரக்டரையும் இரண்டாவது பாகத்துல அறிமுகப்படுத்த நிறைய காட்சிகள் தேவையில்லாம இருந்துச்சி. ஆனா இங்க அந்தப் ப்ரச்சனையே இல்லை. எந்த கேரக்டருக்கும் எந்த ஒரு விளக்கமும் தேவைப்படாம வேலையில்லா பட்டதாரி முதல் பாகத்துக்குள்ள இருக்க மாதிரியே ஒரு தாக்கத்த உண்டு பண்ணிருந்தாங்க. அதுவே படத்துக்கு பெரிய ப்ளஸ்.

அடுத்தது காமெடி.. மனைவி அமலா பாலுக்கு தனுஷ் மட்டும் இல்லாம மொத்த குடும்பமும் நடு நடுங்கிப் போற மாதிரியான காமெடி ட்ராக் நல்லாவே ஒர்க் அவுட் ஆயிருக்கு. தனுஷ், சமுத்திரக்கனி, விவேக், செல் முருகன்னு எல்லாருமே காமெடி நல்லா பண்ணிருக்காங்க.

கிட்டத்தட்ட இந்த விஐபி 2 வோட முதல்பாதி விஐபி முதல் பாகத்துக்கு எந்த வகையிலயும் குறைவில்லாம சூப்பராவே போச்சு. 'வட்டச் செயலாளர் வண்டு முருகன்.. வட்டச்செயலாளர் வண்டு முருகன்'ன்னு விர்ருன்னு போயிட்டு இருந்த படம் ரெண்டாவது பாதில 'வட்டாஆஆஆஆ.... செயலாஆஆஆளர்..... வண்டு...டூ...டூ...டூ..டூ மு...ரு...க..ன்' ன்ங்குற அளவுக்கு வேகம் குறைஞ்சிருச்சி.

ரெண்டாவது பாதிய நகர்த்த இந்த டீம் கையில எடுத்துக்கிட்ட பின்னணி சரியில்லை. இன்னும் சிறப்பா எதாவது செஞ்சிருக்கலாம். அதுவும் க்ளைமாக்ஸ் அதுக்கும் மேல. எதோ இண்டர்வல் முடிஞ்சி படம் போட்ட உடனே வரவேண்டிய சீனையெல்லாம் எடுத்து க்ளைமாக்ஸ்ல போட்ட மாதிரி. ஆனா அதுலயும் காமெடிய கலந்து விட்டதால கொஞ்சம் பரவால்ல.

கஜோல் கெட்டப்புலயெல்லாம் சிறப்பு. அவரோட கதாப்பாத்திர அமைப்பு அப்டியே மன்னன் விஜயசாந்தியத்தான் ஞாபகப்படுத்துது. ஒருவேளை மன்னன் படத்துல ரஜினி விஜய சாந்திய கல்யாணம் பன்னாம குஷ்பூவக் கல்யாணம் பண்ணிருந்தா இப்டித்தான் இருந்துருக்கும் போல. ரஜினி நடிச்ச மாப்பிள்ளைய தனுஷ் ரீமேக் பன்னிட்டாரு... அடுத்து மன்னன் படத்ததான் லைட்டா டிங்கரிங் பண்ணி இந்தப் படத்த எடுத்துருக்காங்க. அடுத்து என்ன படையப்பா தானே? ஏன் தனுஷ்சார்... நீங்க நம்ம மாப்பிள்ளைதான்... ரஜினியோட ரசிகர்தான். அவர ஃபாலோ பன்றதுல தப்பில்லை. அதுக்குன்னு இவ்ளொ க்ளோஸாவா ஃபாலோ பண்றது?

கருத்து கந்தசாமி சமுத்திரக்கனி கருத்துக்களுக்கு நடுவுல கொஞ்சம் காமெடியும் பண்ண முயற்சி செஞ்சிருக்காரு. ஷான் ரோல்டனோட இசை நல்லாவே அமைஞ்சிருக்கு. பாடல்களும் பரவால்ல. நிழலின் அருமை வெயிலில் தெரியும்ங்குற மாதிரி அனிருத்தோட அருமை இந்த ரெண்டாவது பாகத்துல அவரோட மியூசிக் இடையில இடையில வரும்போதுதான் தெரிஞ்சிது.

சவுந்தர்யா ரஜினிகாந்த் திரைக்கதையும் இயக்கமும் ஆஹா ஓஹோன்னு சொல்ல முடியாட்டாலும் முதல் பாகத்துக்கு எந்த ஒரு களங்கமும் வராத அளவுக்கு பண்ணிருந்ததே பெரிய விஷயம். அதுவும் அவங்களுக்கு முதல் படம் மாதிரியே இல்லை. நல்ல மேக்கிங். Poetu வின் நகைச்சுவை வசனங்களும் அவரோட நடிப்பும்தான் படத்துக்கு மிகப்பெரிய ப்ளஸ். நடை உடை பாவனைன்னு நிறைய இடங்கள்ல ரஜினியை ஞாபகப்படுத்துறாரு.

முதல் பாகத்துல இருந்து கிட்டத்தட்ட எல்லா நல்ல வசங்களையும் இந்தப் பகுதில எதாவது ஒரு இடத்துல பேசிடுறாங்க. அதக் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.

மொத்ததுல சூப்பரான முதல் பாதி.. சுமாரான ரெண்டாவது பாதி, க்ளைமாக்ஸ்.. இதான் வேலையில்லா பட்டதாரி ரெண்டாவது பாகம். ஆனா காமெடிக்காகவும் தனுஷுக்காகவும் கண்டிப்பா பாக்கலாம்!

- முத்து சிவா

English summary
Audience review of Dhanush's VIP 2

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X