»   »  மும்பையில் வெளியாகிறது தனுஷின் விஐபி 2 இசை - ட்ரைலர்!

மும்பையில் வெளியாகிறது தனுஷின் விஐபி 2 இசை - ட்ரைலர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 25-ம் தேதி மும்பையில் பிரமாண்டமாக நடக்கிறது.

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகிய படம் 'வேலையில்லாப் பட்டதாரி'. தனுஷ் கேரியரில் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது இந்தப் படம்.

சௌந்தர்யா ரஜினி

சௌந்தர்யா ரஜினி

ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில், தனுஷ் பிறந்தநாளான ஜுலை 28-ஆம் தேதி வெளியாகிறது.

தனுஷ் கதை வசனம்

தனுஷ் கதை வசனம்

இப்படத்திற்கு நடிகர் தனுஷ் கதை, வசனம், பாடல்கள் எழுதியிருக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.

இறுதிக் கட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் ரிலீஸ் குறித்த தேதியை தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

மும்பையில்

மும்பையில்

அதன்படி இசையும், டிரெய்லரும் வருகிற ஜுன் 25-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மும்பையில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.

கலைப்புலி தாணு

கலைப்புலி தாணு

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் கலைப்புலி எஸ்.தாணுவின் 'வி' கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் தனுஷ், அமலாபால், கஜோல், விவேக், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

English summary
Dhanush's VIP 2 audio will be released in Mumbai on June 25th
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil