»   »  வேலையில்லா பட்டதாரி 2: பாக்ஸ் ஆபீசில் புலிப் பாய்ச்சல்!

வேலையில்லா பட்டதாரி 2: பாக்ஸ் ஆபீசில் புலிப் பாய்ச்சல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கலைப்புலி தாணு தயாரிப்பில் தனுஷ், அமலா பால், சமுத்திரகனி, விவேக் நடித்த விஐபி 2 எனும் வேலையில்லா பட்டதாரி 2 படம் ஆகஸ்ட் 11 அன்று ரிலீஸ் ஆனது. செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிப் படமாகும்.

ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விஐபி 2 உடன் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள பொதுவாக எம்மனசு தங்கம், ராம் இயக்கத்தில் தரமணி ஆகிய இரு படங்களும் போட்டியில் களம் இறங்கின.

VIP 2 box office report

தியேட்டர்கள் ஒப்பந்தமாவதிலேயே அதிக தியேட்டர்களில் திரையிடப்பட்ட வேலையில்லா பட்டதாரி 2 ஓபனிங் காட்சியில் பெரிய அளவு கல்லா கட்டத் தொடங்கியது. தொடர்ந்து வசூல் குறையாமல் ஐந்து நாட்களில் தமிழகத்தில் ரூ 22 கோடியை மொத்த வசூலாகப் பெற்ற விஐபி 2, கடந்த வாரம் பாக்ஸ் ஆபீஸ் கலெக்க்ஷனில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

நடிகர் தனுஷ் இதுவரை நடித்த படங்களில் பத்து கோடிக்கு அதிகமாக சம்பளம் வாங்கிய படம் விஐபி 2, தொடங்குவதற்கு முன் இது அதிக பட்சமான சம்பளம் என விமர்சனம் எழுந்தது. தமிழ் மட்டும் என படம் தயாரிக்கப்பட்டிருந்தால் நஷ்டம் தவிர்க்க முடியாத ஒன்று. கபாலி தயாரிப்பில் கிடைத்த அனுபவம், பிரம்மாண்டங்களை பிரதான கொள்கையாக கொண்ட தாணு விஐபி 2 வை இந்தியப் படமாக ஆக்கியதால் வெற்றி உறுதியானது.

வியாபார ரீதியாக முதல் ஐந்து இடங்களில் உள்ள தமிழ் நடிகர்கள் (ரஜினி தவிர்த்து) நடித்த படங்களுக்குக் கூட மும்பையில் ஆடியோ ரீலீஸ் நடைபெற்றது கிடையாது. வட இந்தியா முழுமையும் 1600க்கு மேற்பட்ட தியேட்டர்களில் படத்தை திரையிடும் வாய்ப்பு கிடைத்ததில்லை. இனை தாணு - தனுஷ் கூட்டணி சாத்தியமாக்கி தமிழ் சினிமாவை இந்திய படமாக்கியிருக்கிறது. தமிழ் விஐபி 2 உலகம் முழுமையும் 45 கோடி வரை வசூலிக்கும் வாய்ப்பு இருப்பதாக வர்த்தக வட்டார தகவல்.

- ஏகலைவன்

English summary
According the reports from Tamil box office, Dhanush's VIP 2 collects a big amount worldwide

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil