»   »  தனுஷ் படங்களில் அதிகபட்சம் வசூலித்த விஐபி 2!

தனுஷ் படங்களில் அதிகபட்சம் வசூலித்த விஐபி 2!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனுஷின் கேரியரிலேயே அதிக வசூலைப் பெற்றப் படம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது, கலவையான விமர்சனங்களைப் பெற்ற விஐபி 2.

விஐபி 2 ஜூலை 28-ம் தேதி வெளியானது. அந்தப் படம் வெளியான போது தொடர்ந்து விடுமுறைக் காலம். கிட்டத்தட்ட 5 நாட்கள் நல்ல ஓபனிங். தமிழகத்தில் மட்டும் முதல் வாரத்தில் ரூ 26 கோடி வரை வசூலித்தது. மற்ற ஏரியாக்களின் வசூலையும் சேர்த்து ரூ 42 கோடி.

VIP 2 gets to collection in Dhanush career

அடுத்த வாரம் எந்தப் படமும் வெளியாகவில்லை. போட்டிக்கு படமே இல்லாத சூழல், பரவாயில்லை பார்க்கலாம் என வெளியான சமூக வலைத் தள விமர்சனங்கள், தனுஷின் பேட்டிகள் போன்றவை படத்துக்கு சாதகமாக அமைந்தன.

படம் வெளியாகி நான்கு வாரங்களைத் தாண்டிய நிலையில் ரூ 60 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. தெலுங்கில் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது கூடுதல் போனஸ்!

English summary
VIP 2 has collected nearly Rs 60 cr in box office

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X