»   »  மாமா தனுஷ் போன்றே தீயாக வேலை செய்யும் மச்சினி சவுந்தர்யா ரஜினி

மாமா தனுஷ் போன்றே தீயாக வேலை செய்யும் மச்சினி சவுந்தர்யா ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஐபி2 படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார் இயக்குனர் சவுந்தர்யா ரஜினிகாந்த்.

திருமண வாழ்க்கை கசந்த பிறகு சவுந்தர்யா ரஜினிகாந்த் வேலையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அவர் தனது அக்காவின் கணவர் தனுஷை வைத்து விஐபி 2 படத்தை இயக்கி வருகிறார்.

VIP 2 last schedule to start tomorrow

கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி தான் படப்பிடிப்பை ரஜினிகாந்த் கிளாப்படித்து துவக்கி வைத்தார். இந்நிலையில் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நாளை துவங்க உள்ளது.

இது குறித்து தனுஷ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

விஐபி2 இறுதி கட்ட படப்பிடிப்பு நாளை துவங்குகிறது..மகிழ்ச்சி, படம் அதற்குள் முடியப் போகிறது என்று நம்ப முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தனுஷ் தான் இயக்கியுள்ள பவர் பாண்டி படத்தின் படப்பிடிப்பை பரபரவென நடத்தி நேற்று முடித்தார். இந்நிலையில் சவுந்தர்யாவும் தீயாக வேலை செய்து வருகிறார்.

English summary
Director Soundarya Rajinikanth is very fast in filming VIP 2. Dhanush starrer VIP 2 final schedule is set to start tomorrow.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil