»   »  விஐபி 2 Vs தரமணி... அடுத்த திருவிழாவுக்குத் தயாராகும் திரையரங்குகள்!

விஐபி 2 Vs தரமணி... அடுத்த திருவிழாவுக்குத் தயாராகும் திரையரங்குகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாகுபலி 2 ராட்சஸ வசூலுக்குப் பிறகு டல்லடித்துக் கிடந்த தமிழக அரங்குகள் கடந்த இரு வாரங்களாக ஜே ஜே என களை கட்டி உள்ளன. காரணம் விக்ரம் வேதா, மீசைய முறுக்கு, நிபுணன் போன்ற கமர்ஷியல் ஹிட் படங்கள்.

அடுத்து திரையரங்குகள் மீண்டும் விழாக் கோலம் பூணும் சூழல் உருவாகியுள்ளது.

காரணம் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இரு படங்களின் வெளியீடு.

இரு துருவங்கள்

இரு துருவங்கள்

ஒன்று தனுஷின் விஐபி 2. இன்னொன்று ராமின் தரமணி. இந்த இரண்டு படங்களுமே கதையில், படமாக்கத்தில் இரு துருவங்கள் எனலாம்.

பிரமாண்ட ஓபனிங்

பிரமாண்ட ஓபனிங்

விஐபி 2 படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். தனுஷ், கஜோல், அமலா பால் நடித்துள்ளனர். பெரிய பட்ஜெட், பக்காவான திட்டமிடல், கலைப்புலி தாணுவின் மார்க்கெட்டிங் என இந்தப் படத்தின் ரேஞ்ச் ஒரு சூப்பர் ஸ்டார் படத்துக்கான மதிப்பளவுக்கு உள்ளதாக பேச்சு நிலவுகிறது. நிச்சயம் இந்தப் படத்தின் ஓபனிங் பிரமாண்டமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஜேஎஸ்கேவுக்கு விருதும் ரெடி

ஜேஎஸ்கேவுக்கு விருதும் ரெடி

இன்னொரு பக்கம், தரமணி. விஐபி 2ஐ ஒரு பெண் இயக்கியுள்ளார். தரமணி என்னும் பெண்கள் உரிமை பேசும் படத்தை ராம் இயக்கியுள்ளார். ஆன்ட்ரியா, வசந்த் ரவி நடித்துள்ளனர். ஜேஎஸ்கே சதீஷ்குமார் தயாரித்துள்ளார். இந்த ஆண்டும் அவருக்கு ஒரு தேசிய விருது நிச்சயம் என்கிறார்கள்.

ஏ சான்று கிடைத்தாலும்...

ஏ சான்று கிடைத்தாலும்...

இந்தப் படத்துக்கு ஏ சான்று கிடைத்துள்ளது. படத்தின் விளம்பரங்கள், போஸ்டர்கள் அனைத்துமே ஆண்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. விஐபி 2 படத்துக்கு நிகரான ஓபனிங் தரமணிக்கும் கிடைக்கும் என்பதுதான் இன்டஸ்ட்ரி டாக்.

English summary
VIP 2, Taramani movies will be clashed on Aug 11th

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X