»   »  கலைப்புலி தாணு மற்றும் தனுஷுக்கு தானாக அமைந்த இரு 'விஐபி' படங்கள்!

கலைப்புலி தாணு மற்றும் தனுஷுக்கு தானாக அமைந்த இரு 'விஐபி' படங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

1997-ல் பிரபுதேவா, சிம்ரன், ரம்பா, அப்பாஸ் நடித்த படம் விஐபி. டி சபாபதி எனும் எஸ்டி சபா இயக்கினார். அந்தப் படத்தைத் தயாரித்தவர் கலைப்புலி தாணு. தனது வி கிரியேஷன்ஸ் பேனரில் தயாரித்திருந்தார்.

2016-ல் கபாலியைத் தயாரித்த கையோடு, தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க ஆரம்பித்தார். இந்தப் படத்தை சுருக்கமாக விஐபி என்றே குறிப்பிட்டு வந்தனர். அதன் இரண்டாம் பாகம் விஐபி 2 ஆகிவிட்டது.

VIP, VIP 2 and Kalaipuli Thaanu

இந்த விஐபி 2, தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரியின் இரண்டாம் பாகம்தான் என்றாலும், அதைத் தயாரிக்கும் வாய்ப்பு ஒரிஜினல் 'விஐபி' தயாரித்த எஸ் தாணுவுக்கு தானாகவே அமைந்துவிட்டது. தனுஷின் வுண்டர்பார் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தை தாணு தயாரிக்கிறார்.

அந்த வகையில் தாணுவுக்கும், தனுஷுக்கும் தலா இரண்டு விஐபி படங்களாக அமைந்துவிட்டதுதான் சுவாரஸ்யம்.

VIP, VIP 2 and Kalaipuli Thaanu

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்க, தனுஷ், கஜோல், அமலா பால் நடித்துள்ள விஐபி 2 வரும் ஜூலை 28ம் தேதி உலகெங்கும் பிரமாண்டமாக வெளியாகிறது.

English summary
Kalaipuli S Thaanu, the producer of original VIP (Prabhu Deva) movie is now producing VIP 2 with Dhanush.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil