»   »  'ரகுவரன் ரிட்டர்ன்ஸ்'... ஜூலை 28-ல் வெளியாகிறது விஐபி 2! #VIP2

'ரகுவரன் ரிட்டர்ன்ஸ்'... ஜூலை 28-ல் வெளியாகிறது விஐபி 2! #VIP2

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனுஷின் சமீபத்திய படங்களில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் வேலையில்லா
பட்டதாரி எனும் விஐபி. அந்தப் படத்தை தனுஷே தயாரித்தார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வேலையில்லா
பட்டதாரி 2 (விஐபி 2) என்ற பெயரில் தயாராகியுள்ளது.


VIP2 from July 28

கலைப்புலி எஸ் தாணு தனது வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள இந்தப்
படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். படத்தின் கதை வசனத்தை தனுஷே எழுதியுள்ளார்.


தனுஷுடன் காஜோல், அமலா பால், சமுத்திரக்கனி, சரண்யா உள்ளிட்டோர் நடித்துள்ள
இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.


படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. வருகிற ஜூலை
28-ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது விஐபி 2. முதல்
பாகமும் 2014 ஜுலையில்தான் வெளியானது நினைவிருக்கலாம்.


இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதியை ஒரு வீடியோவாக நேற்று தனுஷ் தன்
ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். தொடர்ந்து ஊடகங்கள், ட்விட்டர்
பதிவர்கள் அதனை மறுபதிவு செய்தவண்ணம் இருந்தனர். எனவே நேற்று மாலை தொடங்கி
இரவு வரை விஐபி 2 #VIP2 என்ற ஹேஷ்டேக் சென்னை மற்றும் இந்தியா
ட்ரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது.

English summary
Dhanush starrer Velaiilla Pattathari has scheduled to release on July 28

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil