»   »  தனுஷின் 'விஐபி 2' டீஸரை வெளியிட்ட அமிதாப் பச்சன்: எப்படி இருக்குன்னு சொல்லுங்க!

தனுஷின் 'விஐபி 2' டீஸரை வெளியிட்ட அமிதாப் பச்சன்: எப்படி இருக்குன்னு சொல்லுங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷின் விஐபி 2 படத்தின் டீஸரை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலா பால், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் விஐபி 2. இந்த படத்தின் டீஸர் இன்று வெளியிடப்படும் என்று தனுஷ் அறிவித்திருந்தார்.

அதன்படி டீஸரை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். டீஸரில் ஹீரோயினையோ, வில்லி கஜோலையோ காணவில்லை. தனுஷ் மட்டுமே ஸ்டைல் காட்டுகிறார்.

டீஸரை பார்த்த தனுஷ் ரசிகர்கள் குஷியாகி தலைவா செம, சூப்பர், அருமை என்று ட்வீட்டி வருகிறார்கள். சிலர் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது தான் டீஸரா என்று கிண்டல் செய்யவும் செய்கிறார்கள்.

English summary
Bollywood star Amitabh Bachchan has released the teaser of Dhanush starrer VIP 2 dircted by Soundarya Rajinikanth.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil