twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அழகான காதலை பேசும்.. சாய் பல்லவி- ராணாவின் விராட பர்வம்.. ட்விட்டர் விமர்சனம் !

    |

    சென்னை : சாய் பல்லவி மற்றும் ராணா டகுபதி இருவருக்கும் இடையே உள்ள காதலை பேசு திரைப்படம் விராட பர்வம்.

    இயக்குனர் வேணு உடுகுலா இயக்கத்தில் வெளியாகி உள்ள இத்திரைப்படம், 1990 கால கட்டத்தில் தெலுங்கானாவில் ஏற்பட்ட உச்சகட்ட கிளர்ச்சியை பற்றிய உண்மை சம்பவத்தை அடிப்படையாக் கொண்ட கதையாகும்.

    ஒரு வருட நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஒரு வழியாக வெள்ளித்திரையில் வெளியாகி உள்ள விராட பர்வம் ட்விட்டர் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

    Suzhal Review: யாரையும் சந்தேகிக்காதே.. யாரையும் நம்பாதே.. புஷ்கர் - காயத்ரியின் சுழல் விமர்சனம்! Suzhal Review: யாரையும் சந்தேகிக்காதே.. யாரையும் நம்பாதே.. புஷ்கர் - காயத்ரியின் சுழல் விமர்சனம்!

    விராட பர்வம்

    விராட பர்வம்

    விராட பர்வம், காதலை மையமாகக் கொண்ட திரைப்படமாகும். அதில், அதிரடி ஆக்ஷன் மற்றும் அரசியலும் இணைக்கப்பட்டுள்ளது. சாய் பல்லவி வெண்ணிலா என்ற கதாபாத்திரத்திலும், ராணா டகுபதி தோழர் ராவண்ணா என்ற எழுத்தாளராகவும் நடித்துள்ளார். மேலும், தேசிய விருது பெற்ற பிரியாமணி, நந்திதா தாஸ், நவீன் சந்திரா, ஜரீனா வஹாப், சாய் சந்த் மற்றும் ஈஸ்வரி ராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

    ஹிட்டடித்த பாடல்

    ஹிட்டடித்த பாடல்

    சுரேஷ் பொப்பிலி இசையமைத்துள்ள இப்படத்தில் 'கொலு கொலு' என்ற பாடல் வெளியாகி பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது. விரத பர்வம் படத்தை டி சுரேஷ் பாபு மற்றும் சுதாகர் செருக்குரி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் கடந்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக படம் வெளியாவது தள்ளிவைக்கப்பட்டு இன்று வெளியாகி உள்ளது.

    உணர்வுபூர்வமான நடிப்பு

    உணர்வுபூர்வமான நடிப்பு

    இப்படத்தில் சாய்_பல்லவி அவரது வெண்ணிலா கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்.. அவள் சிரிக்கும் விதம் மற்றும் அழும் விதம் ஆகியவை நம்மை நிச்சயம் தாக்கி நிரந்தரமான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த அளவுக்கு உணர்வுபூர்வமாக நடித்திருப்பதாக ஒரு இணையவாசி பதிவிட்டுள்ளார்.

    அதிரடி ஆக்ஷன் காட்சிகள்

    அதிரடி ஆக்ஷன் காட்சிகள்

    விராட பர்வம் திரைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் படத்திற்கு 3.5/5 மதிப்பீடு அளித்துள்ளார். கதை அல்டிமேட் என்றும் பல காட்சிகளில் கூஸ்பம்ப் ஆக்ஷன் காட்சிகள். சாய்பல்லவி மற்றும் ரணதாக்குபதி நடிப்பு நன்றாக உள்ளது அருமையான கிளைமாக்ஸ். மேலும் படத்தின் பின்னணி இசை இன்னும் சிறப்பாக இருந்து இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

    ரசிக்கும்படி இல்லை

    ரசிக்கும்படி இல்லை

    மேலும் ஒரு இணையவாசி விராட பர்வம் ஒரு சில நல்ல யதார்த்தமான படமாக உள்ளது. ஆனால், ஒட்டுமொத்த படமும் ரசிக்கும் படி இல்லை. இயக்குநர் கதையை யதார்த்தமாகச் சொல்ல முயற்சித்தாலும், கதையில் நடைமுறை சாத்தியம் இல்லாததால் ஈர்க்கும் படி இல்லை. சாய் பல்லவி மற்றும் மற்ற நடிகர்களின் நடிப்பு மிகவும் நன்றாக உள்ளது என்று கூறியுள்ளார்.

    English summary
    Virata Parvam Twitter Review in tamil
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X