»   »  ஹீரோவான பஞ்சாயத்துத் தலைவர்.. விருத்தாச்சலத்தின் விசேஷ அம்சங்கள்

ஹீரோவான பஞ்சாயத்துத் தலைவர்.. விருத்தாச்சலத்தின் விசேஷ அம்சங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விருத்தாச்சலம் படத்தில் ஹீரோவாக நடிப்பவர் கச்சிராயநத்தம் என்ற கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவராம், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கையால் விருது வாங்கியவராம்.

லட்சுமி அம்மாள் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பி.செந்தில்முருகன் தயாரிக்கும் படம்தான் விருத்தாசலம்.

விருதகிரி என்பவர் இதில் நாயகனாக அறிமுகமாகிறார். சினிமாவுக்குத்தான் இவர் புதுசு. ஆனால் கடலூர் மாவட்டம விருத்தாசத்தில் இவர் பிரபலமானவராம்.

பஞ்சாயத்துத் தலைவர்

பஞ்சாயத்துத் தலைவர்

கச்சிராயநத்தம் என்ற கிராமத்தின் தலைவராக இருந்த போது அவரது சிறந்த நிர்வாகத்திற்காக ஜனாதிபதி பிரதீபா பாட்டிலிடம் விருது பெற்றவர் விருதகிரி.

3 நாயகிகள்

3 நாயகிகள்

படத்தில் நாயகிக்கே வெயிட் அதிகம். அதுவும் 3 நாயகிகளைப் போட்டுள்ளனர். ஸ்வேதா, சமீரா, ஷெரீன் தாஹா என பேர் நாயகிகளா கரம் கோர்த்து கலக்கியுள்ளனர்.

குடிகாரனின் கதை

குடிகாரனின் கதை

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ரத்தன்கணபதி. படத்தின் கதை பற்றி இயக்குனரிடம் கேட்டோம்... கிராமத்தில் குடித்துவிட்டு தன் போக்கில் சுற்றி திரிகிறார் விருதகிரி.

புரட்டிப் போடும் பெண்

புரட்டிப் போடும் பெண்

தனது வாழ்கையில் எதையோ இழந்து விட்டு எதையோ தேடுவது மாதிரியான வாழ்க்கை. அப்படிப்பட்டவரின் நிகழ்கால வாழ்க்கையை ஒரு பெண் எப்படி புரட்டி போடுகிறாள் என்பது கதை முடிச்சு.

பருத்தி வீரன் மாதிரி

பருத்தி வீரன் மாதிரி

என் ராசாவின் மனசிலே, பருத்திவீரன் மாதிரியான கிராமத்து யதார்த்த மனிதர்களை இதில் பிரதிபலித்திருக்கிறோம். இந்த கதாப்பாத்திரத்திற்கு விருதகிரி நூறு சதவீதம் பொருந்தி போய் விட்டார்.

ஓடி வந்து உதவி செய்பவர்

ஓடி வந்து உதவி செய்பவர்

நிஜ வாழ்வில் விருதகிரி சமூக சேவையில் ஆர்வம் உள்ளவர். அவர் இருக்கும் வித்தாசலம் பகுதியில் உள்ள கச்சிராய நத்தம் என்ற ஊரில் யாருக்காவது மருத்துவ உதவி தேவைபட்டால் அவர்களை தனது சொந்த காரில் அழைத்து வந்து சென்னையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வார்.

உயிர் காப்பாளனாக

உயிர் காப்பாளனாக

உயிருக்கு போராடிய எத்தனையோ பேரை காப்பாற்றி உள்ளார்.தனது சொந்த வேலைகளைக் கூட பெரிதாக நினைக்காமல் மற்றவர்களின் உயிர் காப்பாளனாக சேவை செய்கிறார்.

யூனிட்டுக்கே பெருமை

யூனிட்டுக்கே பெருமை

வாழுகிற வரைக்கும் நம்மால் முடிந்தவரை மற்றவர்களை வாழ வைத்து பார்ப்போமே என்று சொல்கிறார். அவரது பெருந்தன்மை என்னை மட்டுமல்ல எங்கள் யூனிட்டையே பெருமைப்படுத்தி விட்டது என்கிறார் இயக்குனர் ரத்தன் கணபதி.

English summary
Virudhachalam is an upcoming Tamil film directed by Raththan Ganabathy, starring Virudhagiri and Swetha in the leading roles.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil