சூரியை இடுப்பில் தூக்கிய விருமன் நடிகை...இதெல்லாம் எப்போ நடந்தது...சொல்லவே இல்லை

சென்னை : ஆரம்பத்தில் சிறிய ரோல்களில் தோன்றி, பிறகு டாப் காமெடியனாக வளர்ந்து, இன்று ஹீரோவாகவும் ஆகி உள்ளார் நடிகர் சூரி. இவர் இன்று தனது 45 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Recommended Video

Soori சாமி தரிசனம், போட்டி போட்டு Selfie எடுத்த Fans *Celebrity

இதற்காக நடிகர் சூரிக்கு பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.ஆனால் சோஷியல் மீடியாவில் நடிகை ஒருவர் வித்தியாசமான முறையில் சூரிக்கு பிறந்த நாள் வாழ்த்து பதிவிட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சூரியை அலேக்காக இடுப்பில் தூக்கி வைத்த போட்டோக்களை வெளியிட்டு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இருக்கிறார் விருமன் பட நடிகை ஒருவர். இதை பார்த்து பலரும் ஷாக்காகி உள்ளனர்.

அட இவர் தானா அது?

அட இவர் தானா அது?

அந்த நடிகை வேறு யாரும் இல்லை. பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா ஷங்கர் தான். விஜய் நடித்த பிகில் படத்தில் பாண்டியம்மா கேரக்டரில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

இவருக்கு இப்படி ஒரு திறமையா?

இவருக்கு இப்படி ஒரு திறமையா?

அர்ஜுன் தொகுத்து வழங்கி சர்வைவர் தமிழ் 2021 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு கலக்கினார். இவர் சிறந்த பரதநாட்டிய கலைஞர் ஆவார். மிக அற்புதமாக வீணை வாசிக்கும் திறன் கொண்டவர். தினமும் டிக்டாக், ரீல்ஸ் போட்டு சோஷியல் மீடியாவிலும் பல ரசிகர்களை வைத்துள்ளார்.

 செம டான்ஸ் வீடியோ

செம டான்ஸ் வீடியோ

சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற கார்த்தியின் விருமன் படத்தில் ஹீரோயின் அதிதியின் தோழியாக நடித்திருந்தார். ஷுட்டிங் ஸ்பாட்டில் நடந்த பல சுவாரஸ்ய வீடியோக்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. இதில் இந்திரஜா மற்றும் அதிதி இணைந்து ஆடிய வீடியோ செம டிரெண்டானது.

சூரியை அலேக்காக தூக்கிட்டாரே

சூரியை அலேக்காக தூக்கிட்டாரே

ஆனால் அதே விருமன் ஷுட்டிங்கின் போது தான் இந்திரஜா, சூரியை இடுப்பில் தூக்கி உள்ளார். இந்த போட்டோக்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதுடன், உங்களோட work பண்ணது ரொம்ப சந்தோஷம் மாமா... உங்கள் கையில் வளர்ந்து இன்று உங்களுடனே நடிப்பது பாக்கியம் மற்றும் பெருமை மாமா..... குத்துகள்ளு...... கொலவிக்கள்ளூ....... என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

 குவியும் லைக்குகள்

குவியும் லைக்குகள்

இந்திரஜாவின் இந்த போஸ்ட்டுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. ஒரு பக்கம் சூரிக்கு பிறந்தநாள் வாழ்த்து, மற்றொரு பக்கம் இந்திரஜாவிற்கு பாராட்டு என ரசிகர்கள் கமெண்ட்டுகளை வாரி வழங்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X