»   »  விசாரணை திரைப்பட விமர்சனத்திற்கு அதிகபட்ச மதிப்பெண் வழங்கி புகழ்ந்த ஆனந்த விகடன்

விசாரணை திரைப்பட விமர்சனத்திற்கு அதிகபட்ச மதிப்பெண் வழங்கி புகழ்ந்த ஆனந்த விகடன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெற்றிமாறன் இயக்கி கடந்த வாரம் வெளியான 'விசாரணை' திரைப்படத்தின் விமர்சனத்திற்கு, ஆனந்த விகடன் வார இதழ் 61 மதிப்பெண்கள் வழங்கியுள்ளது. இவ்வார இதழின் வரலாற்றில், ஒரு சினிமாவுக்கு வழங்கிய 2வது அதிகபட்ச மதிப்பெண் இதுதான்.

நடிகர் தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்' நிறுவனம் மற்றும் வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் ஃபிலிம்' நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள திரைப் படம் ‘விசாரணை'.


கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சந்திரகுமார் எழுதிய ‘லாக் அப்' என்ற நாவலின் தழுவலாக இது உருவாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அட்டகத்தி தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி, கிஷோர் போன்றோர் நடித்துள்ளளார்கள்.


விருதுகள்

விருதுகள்

72வது வெனீஸ் திரைப்பட விழாவில் திரையிடும் பிரிவில் கலந்து கொண்ட இந்தப் படம், விருதுக்கான போட்டி பிரிவுக்குத் தேர்வு செய்யப்பட்டது. அத்துடன், மனித உரிமைகள் பற்றிய சினிமா பிரிவில் விருதுக்கான படமாக அறிவிக்கப்பட்டது.


அதிக மதிப்பெண்

இந்தப் படத்தைத் தமிழ்த் திரையுலகினர் பலரும் பாராட்டிய நிலையில், தற்போது ஆனந்த விகடன் வார இதழ், தனது விமர்சனத்தில், படத்திற்கு 61 மதிப்பெண்கள் வழங்கி கெளரவித்துள்ளது.


16 வயதினிலே டாப்

16 வயதினிலே டாப்

‘ஆனந்த விகடன் விமர்சனக் குழு 1977ல் வெளியான '16 வயதினிலே' திரைப்படத்துக்கு 62.5 மதிப்பெண்கள் அளித்திருந்தது. அதன் பின் ‘முள்ளும் மலரும்' திரைப்படம் 61 மதிப்பெண்கள் பெற்றது. தற்போது 38 வருடங்களுக்குப் பிறகு 'விசாரணை' படம் 61 மதிப்பெண்கள் குவித்திருக்கிறது' என்று விகடன் தெரிவித்துள்ளது.


2வது பெரிய படம்

2வது பெரிய படம்

இதன்படி, விசாரணை திரைப்படம்தான், ஆனந்த விகடன் வரலாற்றில் அதிக மதிப்பெண் வாங்கிய 2வது திரைப்படமாகும். பொதுவாக, விகடன் மதிப்பெண்கள் மக்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக இருப்பதாகவும், திரைத்துறையினரின் அளவுகோலாக இருப்பதாகவும் கூறப்படுவதால், இம்மதிப்பெண் முக்கியத்துவம் பெறுகிறது.


ரஜினி, கமலும் பாராட்டு

ரஜினி, கமலும் பாராட்டு

ஆனந்த விகடன் அளித்த மதிப்பெண் குறித்து தனுஷ் மகிழ்ச்சி வெளிப்படுத்தி தனது டிவிட்டில் பதிந்துள்ளார். ஏற்கனவே ரஜினிகாந்த், கமல்ஹாசன், எழுத்தாளர் சாரு நிவேதிதா போன்றோரும், தமிழில் வெளியான மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்று விசாரணை என்று பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.


English summary
Visaranai movie gets huge mark from Ananda Vikatan review team.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil