»   »  ஜனவரி 29-ல் வெளியாகும் வெற்றிமாறனின் விசாரணை!

ஜனவரி 29-ல் வெளியாகும் வெற்றிமாறனின் விசாரணை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரிலீசாகும் முன்பே பாராட்டுகளைக் குவித்த இயக்குநர் வெற்றிமாறனின் விசாரணை படம், ஜனவரி 29-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்' நிறுவனம் மற்றும் வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் ஃபிலிம்' நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘விசாரணை'.

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஆனந்தி, சரவணா சுப்பையா, கிஷோர், முருகதாஸ், முத்துகுமார், சந்திரன், அஜய் கோஷல் ஆகியோர் நடித்துள்ளளார்கள்.

Visaranai to hit screens on Jan 29th

72-ஆவது வெனீஸ் திரைப்பட விழாவில் திரையிடும் பிரிவில் கலந்து கொண்ட இந்தப் படம், விருதுக்கான போட்டி பிரிவுக்குத் தேர்வு செய்யப்பட்டது. அத்துடன், மனித உரிமைகள் பற்றிய சினிமா பிரிவில் விருதுக்கான படமாக அறிவிக்கப்பட்டது.

படம் பார்த்த பலரும் தங்களைக் கருத்துகளைத் தெரிவித்து எதிர்பார்ப்பை உண்டுபண்ணிய நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தணிக்கையில் யூ/ஏ சான்றிதழ் பெற்ற இப்படம், ஜனவரி 29-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Vetrimaran's Visaranai movie will be released on Jan 29th worldwide.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil