»   »  வெற்றிமாறனின் 'விசாரணை'... பாராட்டு+விளம்பரம் இரண்டுக்குமே தகுதியான படம் தானாம்!

வெற்றிமாறனின் 'விசாரணை'... பாராட்டு+விளம்பரம் இரண்டுக்குமே தகுதியான படம் தானாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் இன்று வெளியாகி இருக்கும் படம் விசாரணை.

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஆனந்தி, முருகதாஸ், சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.


காவல்துறையின் உண்மையான விசாரணை நிகழ்வுகளை தோலுரித்துக் காட்டியிருக்கும் இப்படம் ரசிகர்களைக் கவர்ந்ததா? என்பதை இங்கே பார்க்கலாம்.


முதல் பாதி

"முதல் பாதி முடிவில் விசாரணை மிகவும் நன்றாக இருக்கிறது, ஒரு நல்ல திரைப்படம் கொடுத்த தனுஷ், வெற்றிமாறனுக்கு எனது வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார் தங்கமகன் சிவா.


கண்டிப்பா பிளாக்பஸ்டர்

"வெற்றிமாறன், தனுஷ் இந்த வருடத்தோட பிளாக்பஸ்டர் படமா விசாரணை இருக்கும்" என்று படத்தைப் பார்த்து நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார் ஹரி.


விசாரணை

"காவல்துறை விசாரணைகளின் கருப்புப் பக்கத்தை எடுத்துரைக்கும் விசாரணை ஒரு உணமையான திரைப்படமே. எனது மதிப்பெண் 3.5/5" என்று படத்திற்கு மதிப்பெண் வழங்கியிருக்கிறார் கிஷோர் மரியான்.


நடிப்பு மட்டுமே

"விசாரணை முதல் பாதி முடிந்தது. பெரும்பாலான காட்சிகளை யூகிக்கக் கூடிய இந்தக் கதையில் நடித்திருப்பவர்களின் திறமை மட்டுமே படத்தைத் தாங்குகிறது" என்று கூறியிருக்கிறார் சுரேஷ்.


எல்லா பாராட்டுகளுக்கும்

"விசாரணை எல்லா பாராட்டுகள் மற்றும் விளம்பரங்களுக்கும் பொருத்தமான படம்தான். வழக்கமான கமர்ஷியல் மற்றும் சினிமாத்தனம் இப்படத்தில் இல்லை. திறமையானவர்களின் நடிப்புடன் விசாரணை ஒரு உண்மையான திரைப்படமாக வெளியாகியுள்ளது" என்று படம் குறித்து ஆழமாக பதிவிட்டு இருக்கிறார் இந்திரன்.


மொத்தத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை வெற்றிமாறனின் விசாரணை திரைப்படம் காப்பாற்றி விட்டது என்று தாராளமாக கூறலாம்.
English summary
Attakathi Dinesh, Anandhi Starrer Visaranai Released Worldwide on Today, Written and Directed by Vetrimaran - Live Audience Response.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil