»   »  தனுஷ் - வெற்றி மாறனின் "விசாரணை".. பிப்ரவரிக்குத் தள்ளி வைப்பு!

தனுஷ் - வெற்றி மாறனின் "விசாரணை".. பிப்ரவரிக்குத் தள்ளி வைப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனவரி 29 ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட வெற்றிமாறனின் விசாரணை திரைப்படம் தற்போது பிப்ரவரி 5 ம் தேதிக்கு தள்ளிப் போயிருக்கிறது.

நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனமும், வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனமும் இணைந்து தயரித்திருக்கும் படம் விசாரணை. பிரபல எழுத்தாளர் எம்.சந்திரசேகரின் லாக் - அப் நாவலை அடிப்படையாக வைத்து விசாரணை உருவாகி இருக்கிறது.


அட்டகத்தி தினேஷ், ஆனந்தி, முருகதாஸ், சமுத்திரக்கனி, கிஷோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசைமயமைத்து இருக்கிறார்.


Visaranai Release Date Postponed

72 ஆண்டு கால வெனீஸ் திரைப்பட வரலாற்றில் திரையிடும் பிரிவில் கலந்து கொண்ட முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை விசாரணை பெற்றது.


மேலும் மனித உரிமைகள் பற்றிய சினிமா பிரிவில் விருதுக்கான படமாகவும் விசாரணை அறிவிக்கப்பட்டது. வெளியாகும் முன்பே பல்வேறு விருதுகளையும் விசாரணை வென்றிருப்பதால் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருக்கிறது.


இந்நிலையில் ஜனவரி 29 ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட விசாரணை தற்போது பிப்ரவரி 5 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


பொங்கல் தினத்தில் கதகளி, தாரை தப்பட்டை, ரஜினிமுருகன் மற்றும் கெத்து என்று 4 திரைப்படங்கள் வெளியாகின்றன. இதனால் 2 வாரம் கழித்து உங்கள் படத்தை வெளியிடுங்கள் என்று தமிழ் சினிமாவின் மூத்த கலைஞர்கள் கூறியதை விசாரணை குழுவினர் ஏற்றுக் கொண்டனராம்.


இதனால் தான் பிப்ரவரி 5 ம் தேதிக்கு தள்ளிப் போயிருக்கிறது விசாரணை.

English summary
Vetrimaran's Visaranai Movie Currently has been Postponed to February 5.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil