»   »  ''ஆமா, ஏன் இன்னும் துணிய உருவாம வச்சிருக்கீங்க.. உருவிட்டு அடிங்க''

''ஆமா, ஏன் இன்னும் துணிய உருவாம வச்சிருக்கீங்க.. உருவிட்டு அடிங்க''

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த வாரம் வெளியாகி பலரது வரவேற்பையும், பாராட்டையும் ஒருசேர பெற்று வரும் படம் விசாரணை.

கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மூ.சந்திர குமாரின் லாக்கப் நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை இயக்கி அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.


படம் முழுவதும் வன்முறை வழிந்தோடினாலும் கூட தான் எடுத்துக் கொண்ட கதையில் கமர்ஷியலை துளியும் கலக்காமல், காவல்துறையின் விசாரணை முறைகளை எடுத்துக் கூறியுள்ள வெற்றிமாறனை இந்தப்படம் இன்னும் உயரத் தூக்கி அழகு பார்த்திருக்கிறது.


லாக்கப் நாவலுடன் சில உண்மை சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் பெரும்பகுதி வசனங்களே.


விசாரணையைத் தூக்கி நிறுத்திய வசனங்களில் இருந்து ஒருசிலவற்றை பார்க்கலாம்.


விசாரணை கதை

விசாரணை கதை

தினேஷ், முருகதாஸ், பிரதீஷ் ராஜ், சிலம்பரசன் இந்த 4 பசங்களோட அமைதியான வாழ்க்கையில திடீர்னு ஒரு நாள் போலீஸ் குறுக்கிடுது. எப்போதும் போல விடியற ஒரு காலைப் பொழுதுல இவங்களை அடிச்சு இழுத்துட்டுப் போற போலீஸ் ஒத்துக்கங்கன்னு மட்டும் சொல்லி போட்டு அடிக்கறாங்க. அவங்க எதுக்கு அடிக்கறாங்க எதை ஒத்துக்க சொல்றாங்கன்னு தெரியாம தொடர்ந்து உடம்புல ரத்தம் வர்ற அளவுக்கு 4 பேரும் அடிவாங்கிட்டு இருக்காங்க.கடைசியில யாரோ செஞ்ச கொள்ளைய நம்ம மேல போடப் பாக்குறாங்கன்னு தெரியுது. ஒத்துக்கிட்டா உங்களுக்கு என்ன வேணாலும் செய்றோம்னு ஆசை காட்டற போலீசை எதிர்த்து அந்த வழக்குல இருந்து எப்படி அவங்க வெளில வராங்க, வந்த இடத்துல அவங்களுக்கு என்ன மாதிரியான கொடுரம் நடக்குதுங்கிறது தான் படத்தோட மொத்தக் கதை.


அஜய் கோஷ்

அஜய் கோஷ்

விசாரணையில ஆந்திர போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்துக்கு அஜய் கோஷ் ரொம்பவே பொருத்தம். அதிலையும் ரொம்ப இயல்பா பேசிட்டு திடீர்னு வில்லத்தனம் காட்டுறது, பசங்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுக்கறது இதையெல்லாம் பாக்கும்போது ஒரு போலீஸ்காரராகவே அஜய்கோஷ் வாழ்ந்திருக்கிறார்னு தான் தோணுது.அஜய் கோஷின் வசனங்கள் இயல்பா படத்தோட பொருந்திப் போவது பெரும்பலம்.


ஷார்ப் வசனங்கள்

ஷார்ப் வசனங்கள்

'அரை மணி நேரம் பெருமாளை நின்னு பார்த்தேன் நல்ல தரிசனம்', 'அந்த பிரசாத்தை அவங்களை எடுத்துக்க சொல்லு ', ஆமா ஏன் இன்னும் துணிய உருவாம வச்சிருக்கீங்க உருவிட்டு அடிங்க', அவரும் இன்ஸ்பெக்டரா இருந்து ஏசி ஆனவர் தானே ஒரே நாள்ல கேஸை முடிக்க சொன்னா எப்படி', வளவளவென்று வசனம் பேசாமல் ஒரே வரியில் பேசி பார்வையாளர்களின் மனங்களில் அச்சத்தை தோற்றுவித்ததன் மூலம் வில்லனாக வென்றிருக்கிறார் அஜய். தமிழ் சினிமாவில் ஏற்பட்டிருக்கும் வில்லன் பஞ்சத்தை அஜய் கோஷ் தீர்த்து வைப்பார் என்று நம்பலாம்.


அன்றாட நிகழ்வுகள்

அன்றாட நிகழ்வுகள்

'எதுக்கு கூப்பிட்டு வந்தாங்க எதுக்கு அடிக்கிறாங்கன்னு தெரியலை மச்சான்' என்று முருகதாஸ் கதறும் இடம், 'போலீஸ்காரங்க கேஸை முடிக்க என்ன வேணாலும் பண்ணுவாங்க' என்ற அல்வா வாசுவின் பேச்சு, 'கோர்ட்டுக்கு கொண்டு போறவரைக்கும் ஒண்ணும் பண்ண மாட்டாங்க,உங்களுக்கு பீடி, பிரியாணி சரக்கு எல்லாம் கொடுப்போம்' என்று போலீஸ்காரர் சமாதானம் பேசுவது போன்ற காட்சிகளில் வசனங்கள் மூலம் காவல்துறையின் அன்றாட நிகழ்வுகளை படம்பிடித்துக் காட்டியிருக்கிறது விசாரணை.


சமுத்திரக்கனி & கிஷோர்

சமுத்திரக்கனி & கிஷோர்

'என்னோட அதிகாரத்துல இருக்கற ஸ்டேஷனுக்குள்ள நீங்க எப்படி வரலாம்' என்று சமுத்திரக்கனி மேலதிகாரியிடம் கேட்பது நச். 'நீங்க தண்ணி அடிச்சிருக்கீங்க நாம அப்புறம் பேசலாம்', உங்க சம்பளத்தோட கொஞ்சம் அதிகமா பணம் வச்சிருந்தா உங்களுக்கு பயமா இருக்கும் தானே' என்று சமுத்திரக்கனியிடம் கேள்வி கேட்டு கிஷோர் கெத்து காட்டும் காட்சிகள் ரசிகர்களை படத்துடன் இயல்பாக ஒன்றச் செய்கின்றன.


கொடுமையான முடிவு

கொடுமையான முடிவு

'உங்களை நம்பி தானே வந்தோம் உங்க முன்னால போட்டு அடிச்சப்ப என்ன பண்ணீங்க' என்ற தினேஷின் கேள்விக்கு 'என்னால எதுவுமே பண்ண முடியலைடா' என்று சமுத்திரக்கனி ஒப்புக்கொள்ளும் இடங்கள் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியின் கையாலாகாத நிலைக்கு சான்று. படத்தின் முடிவு எதிர்பார்த்த ஒன்று என்றாலும் மனம் கனத்துப் போவதை மறுக்கவோ, மறைக்கவோ முடியவில்லை.


மொத்தத்தில் மாஸ் வசனங்கள் எதுவுமின்றி இயல்பை மீறாத வசனங்களில் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கிறது வெற்றிமாறனின் 'விசாரணை'.English summary
Vetri Maran's Visaranai - Some most Attracted Dialogues Overview.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil