»   »  சைக்கோ போலீஸ் டு வழிப்பறி கொள்ளைக்காரன்... விசாரணை வில்லனுக்கு அடித்த 'லக்'

சைக்கோ போலீஸ் டு வழிப்பறி கொள்ளைக்காரன்... விசாரணை வில்லனுக்கு அடித்த 'லக்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: வெற்றிமாறனின் விசாரணை படத்தில் வில்லனாக தூள் கிளப்பியிருந்த நடிகர் அஜய் கோஷ்க்கு அடுத்ததாக பெரிய பட்ஜெட் படங்களின் கதவுகளும் திறந்து விட்டன.

யாருப்பா இந்த அஜய் கோஷ்ன்னு கேட்கறீங்களா? விசாரணை படத்துல தினேஷ், முருகதாஸ் குரூப்ப ஒரு சைக்கோ போலீஸ் நல்லா அடிச்சு ஒதைப்பாரே அவர்தான்.


விசாரணை படத்துல சாரோட நடிப்பை உலகமே பாராட்ட அவரோ சத்தமில்லாம உலகமே வெய்ட் பண்ணிக்கிட்டிருக்க பாகுபலி 2 படத்துல துண்டு போட்டு ஒரு இடத்தைப் பிடிச்சிட்டாரு.


Visaranai Villain Gets A Role In Baahubali The Conclusion

அதோட இல்லாம 5 நாள் படப்பிடிப்புல கலந்துகிட்டு தென்னிந்தியாவோட டாப் நட்சத்திரங்களோட வேற சேர்ந்து நடிச்சிருக்காரு. இந்த வாய்ப்பு பற்றி அஜய் கோஷ் என்ன சொல்றாரு.


"கதைப்படி அனுஷ்காவோட ராஜ்ஜியத்துல 'பாண்டிபோடு வீரய்யா'ங்கிற கொள்ளைக்கார தலைவனா நடிக்கிறேன். கேரளாவுல நடந்த படப்பிடிப்புல இதுவரைக்கும் 5 நாள் கலந்துகிட்டு நடிச்சிருக்கேன்.


அடுத்ததா மார்ச் மாசம் மறுபடியும் படப்பிடிப்புல கலந்துக்கப் போறேன். இது ஒரு சுவாரசியமான கதாபாத்திரம். அதனால பெரிய திரையில என்னைப் பார்க்கப்போற அந்த நாளுக்காக காத்துகிட்டுருக்கேன்.


விசாரணை படத்துக்காக எல்லோரும் என்னைப் பாராட்டுறாங்க ஆனா இந்தப் படத்துல நடிக்கும் போது மக்கள் என்ன நல்லா திட்டப் போறாங்கன்னு பயந்தேன்.


வெற்றிமாறனோட விசாரணை பர்ஸ்ட் ஷோ போய் தியேட்டர்ல பார்த்தேன். திரும்பி நடந்து வரும்போது ரொம்ப பயமா இருந்தது எல்லோரும் திட்டுவாங்கன்னு எதிர்பார்த்தேன்.


ஆனா எல்லாமே வேற மாதிரி இருந்தது. நான் நடிச்சிருந்ததை எல்லோரும் பாராட்ட ஆரம்பிச்சாங்க. அதே மாதிரி விசாரணை படத்துல தினேஷ அடிக்கற மாதிரி நடிக்கும் போது ரொம்ப கஷ்டமா இருந்தது.


அது ஒரு படப்பிடிப்பு தான்னு தெரிஞ்சும் ஒவ்வொரு முறை நடிக்கும் போதும் ரொம்ப கஷ்டப்பட்டேன். சில நேரம் அழுகை கூட வந்தது. ஆனா தொடர்ந்து படப்பிடிப்புல கலந்துக்க வேண்டியிருந்தது.


படத்துல அது முக்கியமான காட்சிங்கிறதால சும்மா தான் அடிக்கிறேன்னு என்னை நானே சமாதனப்படுத்திக்கிட்டு நடிச்சேன் ஆனா இவ்வளவு பெரிய வரவேற்பை எதிர்பார்க்கல" என்று அஜய் கோஷ் தெரிவித்திருக்கிறார்.


விசாரணை போன்று பாகுபலி 2 படத்திலும் முக்கியமான வேடமென்பதால் அஜய் கோஷின் மகிழ்ச்சி தற்போது பன்மடங்காக உயர்ந்திருக்கிறது.


நீங்க கலக்குங்க அஜய்!

English summary
Visaranai Villain Ajay Ghosh Gets A Dreaded Dacoit Role, In Baahubali The Conclusion.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil