விஷால் 31 படத்தோட தலைப்பு இதுதான்… டைட்டிலே சும்மா கெத்தா இருக்கே !

சென்னை : விஷால் 31 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Recommended Video

கணக்கு காட்ட முடியாமல் ஓடியவர் தான் விஷால் - உஷா ராஜேந்தர்

விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு பர்ஸட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது. இதையடுத்து சற்று முன் போஸ்டர் வெளியானது.

அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்கிறார்.

கதாநாயகனாக

கதாநாயகனாக

பிரபல தயாரிப்பாளர் ஜிகே ரெட்டி அவர்களின் மகன் விஷால். இவர் அர்ஜுனிடம் வேதம் ஏழுமலை ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.இதையடுத்து, 2004ம் ஆண்டு வெளியான செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். செல்லமே திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து, சண்டைக்கோழி , திமிரு, சிவப்பதிகாரம், தாமிரபரணி, அவன் இவன், பாண்டிய நாடு, பாயும்புலி உள்பட ஏராளமான திரைப்படங்களில் விஷால் நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார்.

புது இயக்குனர்

புது இயக்குனர்

நடிகர் விஷால் கடைசியாக சக்ரா படத்தில் நடித்திருந்தார். இப்படம் பிப்ரவரி 19 அன்று திரையரங்கில் வெளியானது. புதுமுகம் இயக்குனர் ஆனந்தன் இயக்கியுள்ள இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கசாண்ட்ரா, ரோபோ ஷங்கர், மனோபாலா, ஸ்ருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

எனிமி

எனிமி

அடுத்ததாக, விஷால்30 திரைப்படமான 'எனிமி'யில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஆர்யாவும் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார். அதாவது விஷாலுக்கு வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. எனிமி ஆர்யாவின் 32-வது படம் என்றாலும், இது விஷாலின் 30-வது படம் என்று கூறப்பட்டு வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் படம் வெளியாக உள்ளது.

தத்ரூபமான சண்டை

தத்ரூபமான சண்டை

விஷாலின் 31வது திரைப்படத்தை து.பா.சரவணன் இயக்கி வருகிறார் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. தற்போது விஷால் சண்டையிடும் வீடியோ ஒன்று வெளியாகி அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது. அந்த சண்டை காட்சியில் பாட்டிலைக் கொண்டு விஷாலின் தலையில் அடிக்கும் காட்சி தத்ரூபமாக எடுக்கப்பட்டு இருந்தது.

ஃபர்ஸ்ட் லுக் டைட்டில்

ஃபர்ஸ்ட் லுக் டைட்டில்

விஷால் இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் . அவரது பிறந்த நாளை முன்னிட்டு விஷால்31 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு 'வீரமே வாகை சூடும்'என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் கட்டையுடன் ஆக்ரோஷமாக நிற்கிறார் விஷால் . இணையத்தில் வெளியாகி உள்ள இந்த போஸ்டர் வைரலாகி உள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசை

யுவன் சங்கர் ராஜா இசை

அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

44வது பிறந்தநாள்

44வது பிறந்தநாள்

விஷால் இன்று 44வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் இணையத்தின் வழியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும்,விஷாலின் தீவிர ரசிகர்கள் காமன் டிபிக்களை வெளியிட்டு அவருக்கு வாழ்த்துக்கூறி வருகின்றனர்.

துப்பறிவாளன்2

துப்பறிவாளன்2

விஷால் நடித்த துப்பறிவாளன் படத்தை இயக்கினார் மிஷ்கின். இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. படத்தின் பட்ஜெட் தொடர்பாக மிஷ்கின், விஷால் நட்பில் விரிசல் ஏற்பட்டது. இதனால் துப்பறிவாளன் 2 படத்திலிருந்து மிஷ்கின் வெளியேறினார். இதையடுத்து துப்பறிவாளன் 2 படத்தை விஷால் இயக்கி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X