லத்தி ... டீசருடன் வெளியிடப்பட்ட விஷால் 32 டைட்டில்

சென்னை : விஷால் நடிக்கும் விஷால் 32 படத்தின் ஷுட்டிங் கடந்த சில வாரங்களாக முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்த டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

விஷாலின் 32 வது படத்திற்கு லத்தி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த டீசரில், வீட்டின் மொட்டை மாடியில் அதிகாலையில், கொடியில் துணி காய்ந்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு சாதாரண சட்டை, காக்கி சட்டையாக மாறுகிறது. அதில் முருகானந்தம் என்ற பெயர் விஷால் என மாறுகிறது. தரையில் குத்தி நிற்கும் லத்தி, அதை ஆவேசமாக எடுக்கும் கை என இந்த டீசர் அமைக்கப்பட்டுள்ளது.

Vishal 32 title teaser released

இந்த படத்தில் விஷால், முருகானந்தம் என்ற போலீஸ் ரோலில் நடிக்கிறார். இந்த படத்தில் ஹீரோயினாக சுனைனா நடிக்கிறார். 2013 ம் ஆண்டு வெளியான சமர் படத்திற்கு பிறகு விஷாலுடன் சுனைனா இணைந்து நடிக்கும் படம் இது. வினோத் குமார் இயக்கும் இந்த படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான ரானா மற்றும் ரமணா ஆகியோர் இணைந்து ரானா ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரிக்கின்றனர்.

லத்தி படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இந்த படம் கிட்டதட்ட முடிவடையும் நிலையில் உள்ளதாம். 2022 ம் ஆண்டு பண்டிகை நாளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படம் என்பது தெரிகிறது. டைரக்டர் வினோத்குமாருக்கு இது முதல் படமாகும். இவர், சிகரம் தொடு, இப்படை வெல்லும் போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் கவுரவ் நாராயணனிடம் அசிஸ்டென்டாக பணியாற்றியவர்.

இந்த படத்தில் விஷால், சுனைனா தவிர இளைய திலகம் பிரபுவும் முக்கிய ரோலில் நடித்துள்ளாராம். இரண்டாவது முறையாக இணைந்துள்ள விஷால் - சுனைனா ஜோடி ரசிகர்களுக்கு நிச்சயம் ட்ரீட்டாக அமையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதே போல் பிரபுவும், விஷால் நடித்த தாமிரபரணி, ஆம்பள போன்ற படங்களில் நடித்துள்ளார்.

லத்தி படத்தின் இரண்டாம் கட்ட ஷுட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. அடுத்த கட்ட ஷுட்டிங் விரைவில் துவங்கப்பட உள்ளதாம். அதே சமயம், விஷால் நடித்துள்ள எனிமி படம் தீபாவளிக்கு தியேட்டரில் ரிலீசாக உள்ளது. எனிமி படம், ரஜினியின் அண்ணாத்த மற்றும் சிம்புவின் மாநாடு படங்களுடன் மோத உள்ளது.

இருமுகன், அரிமா நம்பி போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் ஆனந்த் ஷங்கர் தான் எனிமி படத்தை இயக்கி உள்ளார். இதில் விஷாலுக்கு வில்லனாக நடிகர் ஆர்யா நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X