பாட்ஷா பட ஸ்டைலில் டைட்டில்... விஷால் 33 படத்தின் அசத்தில் டைட்டில் இதுதான்

சென்னை : விஷால் 33 படத்திற்கு பாட்ஷா பட ஸ்டைலில் டைட்டில் வைத்து அசத்தி உள்ளனர். இதனால் படத்தின் கதை என்னவாக இருக்கும் என ரசிகர்கள் இப்போதே யோசிக்க துவங்கி விட்டனர்.

விஷால் தற்போது வீரமே வாகை சூடும் படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து மெகா பட்ஜெட்டில் உருவாகும் பான் இந்தியன் படத்தில் நடிக்க போகிறார். டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்க உள்ளார்.

விஷால் 33 டைட்டில் இது தான்

விஷால் 33 டைட்டில் இது தான்

புத்தாண்டை முன்னிட்டு நேற்று விஷாலின் 33 வது படத்தின் டைட்டில் லுக் வெளியிடப்பட்டது. இந்த படத்திற்கு மார்க் ஆன்டனி என பெயர் வைத்துள்ளனர். ரஜினி நடித்த பாட்ஷா படத்தில் ரகுவரன் நடித்த வில்லன் கேரக்டரின் பெயரும் மார்க் ஆன்டனி தான். இந்த படத்தில், பாட்ஷா...மாணிக் பாட்ஷா என ரஜினி பேசிய டயலாக் எவ்வளவு பிரபலமோ அதே அளவிற்கு, ரகுவரன் பேசும், ஆன்டனி...மார்க் ஆன்டனி என்ற டயலாக்கும் பிரபலம்.

பிப்ரவரியில் ஷுட்டிங்

பிப்ரவரியில் ஷுட்டிங்

இந்த போஸ்டரில் எலும்புக் கூடுகள் குவிந்து கிடக்கும் போர்களத்தில் இளைஞர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் திரும்பி நிற்கும் வகையில், சிவப்பு நிற பேக்கிரவுண்டுடன் இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷுட்டிங்கை 2022 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லா நல்ல கதையும் எனக்கே வருது

எல்லா நல்ல கதையும் எனக்கே வருது

மாநாடு படத்தில் சிம்புவை தொடர்ந்து இந்த படத்தில் விஷாலுக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க போகிறார். இந்த தகவலை நேற்று ட்விட்டரில் அவரே உறுதி செய்துள்ளார். கடவுளே...எல்லா நல்ல கதையும் என்கிட்டயே வருதே. இது மாநாடு 2 ஆவாக இருக்கும் என எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் எஸ்.ஜே.சூர்யாவின் மற்றொரு அட்டகாசமான நடிப்பை பார்க்கலாம் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

தலைவரான எஸ்.ஜே.சூர்யா

தலைவரான எஸ்.ஜே.சூர்யா

மாநாடு படத்திற்கு பிறகு எஸ்.ஜே.சூர்யாவிற்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் பல மடங்கு அதிகமாகி விட்டது. தற்போது சோஷியல் மீடியாக்களில் இவரை ரசிகர்கள் பலரும் தலைவரே என்று தான் குறிப்பிட்டு வருகிறார்கள். அதே போல் தனது நடிப்பை பாராட்டி பதிவிடப்படும் ஒவ்வொரு ட்வீட்டையும், எஸ்.ஜே.சூர்யா ரீட்வீட் செய்து வருகிறார். அதற்கு நன்றியும் தெரிவித்து வருகிறார்.

விரைவில் அடுத்த அறிவிப்பு

விரைவில் அடுத்த அறிவிப்பு

மார்க் ஆன்டனி படத்தை எஸ்.வினோத் குமார், மினி ஸ்டூடியோ பேனரில் தயாரிக்க உள்ளார். இதற்கு முன் விஷால் - ஆர்யா நடித்த எனிமி படத்தையும் இவர் தான் தயாரித்தார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் உள்ளிட்ட படக்குழுவினர் பற்றிய விபரம் விரைவில் வெளியிடப்பட உள்ளதாம். இது பான் இந்தியன் படம் என்பதால் மற்ற மொழிகளை சேர்ந்த நடிகர்கள் அதிகம் நடிப்பார்கள் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X